#❤️எங்கேயும் காதல் #💑என் முதல் காதல்😊 #💌 என் காதல் கடிதம் #📝என் இதய உணர்வுகள் #💖நீயே என் சந்தோசம்🥰
மாது - பேரின்ப ஊற்று
***************************
வானமும் மேகமும்
இருப்பு பாதையடி
வாழ்வில் பறவையாய்
பறந்து மகிழ்வோம்
நீலக்கடலில் நீந்தியோடி
தாகமும் தணிப்போம்
நீயும் நானும்
ஆழ்கடலில் மூழ்கிடுவோம்
இளமையின் சூடும்
சிலிர்க்க வைக்கும்
இனிமை பொங்க
உரசல் அரங்கேறும்
தேகமும் மின்னலில்
தீப்பொறிப் பறக்கும்
தேவதையின் அன்பில்
நித்தமும் குளிப்போனே
உள்ளம் குளிர்ந்து
கூடல் தித்திக்கும்
உயிருக்குள் பெருமூச்சு
ஓங்கியே ஒலிக்கும்
மல்லிகை வாசம்
நாசியை துளைக்கும்
மங்கையின் முகமும்
நிலவாய் மிளிரும்
பரிதவிக்கும் வேளையிலே
ஆற்றித் தேற்றுவாள்
பனித்துளியில் வாழ்வின்
தத்துவம் விளங்கும்
இருமனம் இணைந்து
கீதங்கள் ஒலிக்கும்
இரட்டிப்பு இன்பம்
உள்ளத்தில் வேரூன்றிடும்
✍️தமிழ் தாசன்
