#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 திவ்யதேச யாத்திரையில் அடுத்த கோயில்
நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்
தாயார் சொல் கேட்டு நடக்கும் பெருமாள்
கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கும் தாயார்
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திவ்ய தேசம் நாச்சியார் கோயில். பெருமாளின் திருநாமம் சீனிவாசப் பெருமாள். தாயாரின் திருநாமம் வஞ்சுளாதேவி.
இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் இக்கோவிலில் மிகவும் விசேஷமானது ஆகும். இங்குள்ள உற்சவ தாயார், கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள்.
தாயார், இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, கோயில் நிர்வாகம் அனைத்தும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார்.
மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள்.
சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார்.
மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று வஞ்சுளாதேவியை தேடினர். மகாவிஷ்ணுவுடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைப் பற்றிக் கூறினார். உடனே மகாவிஷ்ணு அங்கு சென்று வஞ்சுளா தேவியை பெண் கேட்டார்.
மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார்.
கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார்.
கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.
நாச்சியார் கோவிலில் கருடாழ்வார் தனி சந்நிதியில் உடலில் 9 நாகங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார், இவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வீதியுலா செல்லும்போது மூலவரான கல்கருடன் (4 டன் எடை) மீதே சுவாமி எழுந்தருள்கிறார். கல்கருடனை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் 4 பேர் இவரை சுமந்து வருவர். பின்னர் 8, 16, 32 என்று அதிகரித்து 128 பேர் வரை சுமக்கிறார்கள். அதேபோல புறப்பாடு முடிந்து, கல்கருடனை கருவறையில் வைக்க வரும்போது 128 பேர் தொடங்கி 64, 32, 16, 8 என்று குறைந்து நிறைவாக 4 பேர் சுமப்பது இன்றும் நடைபெறுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணார் கனவில் தோன்றிய திருமால், தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார், அதன்படி சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், மாடக்கோயில் அமைப்பில் அவர் இக்கோயிலைக் கட்டினார்.
நீலன் என்ற குறுநில மன்னர், திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தான் வைத்திருந்த பணம் அனைத்தையும் இறைபணிக்கே செலவு செய்தார். வைணவர் இல்லை என்ற காரணத்தால், அவரை யாரும் ஏற்கவில்லை. இதுகுறித்து திருமாலிடம் தெரிவித்தார் நீலன். திருமாலும் மனம் உவந்து, வைணவ ஆச்சாரியராக வந்திருந்து நீலனுக்கு முத்ராதானம் செய்து வைத்தார். (ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக் கொள்வதற்காக அவரது கரங்களில் சங்கு, சக்கரம் அச்சு இடப்படுவதே முத்ராதானம் எனப்படும்). ஆச்சாரியராக வந்திருந்ததால் இத்தலத்து சீனிவாச பெருமாள், 2 கைகளுடன் உள்ளார். சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் காணப்படுகிறது .
தனக்கு வைணவர் என்று அங்கீகாரம் கொடுத்த இத்தல பெருமாள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாசுரங்கள் பாடி, நம்பி (பரிபூரண நற்குணங்கள் நிரம்பியவர்) என்று அழைத்து மங்களாசாசனம் செய்தார். இத்தலத்தில் மட்டுமே திருமால் ஆச்சாரியராக வந்திருந்து, முத்ராதானம் செய்துவைத்துள்ளார்.
திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
இது ஒருமாடக்கோயில்(யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும்
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

