ShareChat
click to see wallet page
👉 அழகு அழகு அழகு 👈 கண்ணுக்கு ஒளி அழகு கழனிக்கு மழை அழகு விண்ணுக்கு கதிர் அழகு விளைவுக்குப் பயிர் அழகு பெண்ணுக்கு நகை அழகு பேதைக்கு அறி வழகு மண்ணுக்கு நீர் அழகு மனிதர்களுக்கு நல் மனமே அழகு...!! உடலுக்கு உயிர் அழகு உணவுக்கு சுவை அழகு கடலுக்கு அலை அழகு காட்டுக்கு செடி அழகு மடலுக்கு எழுத் தழகு மரத்துக்கு இலை அழகு திடலுக்கு விரி வழகு தமிழுக்குச் சொல் அழகு...!! மானுக்கு விழி அழகு முயலுக்கு செவி அழகு வானுக்கு மதி அழகு வறுமைக்குப் பசி அழகு கோனுக்கு கோல் அழகு குயிலுக்குக் குரல் அழகு தேனுக்கு நிறம் அழகு தேக்குக்கு திறம் அழகு...!! வயலுக்குப் பயிர் அழகு வண்மைக்குக் கொடை அழகு புயலுக்குச் சுழல் அழகு புதுமைக்கு நடை அழகு கயலுக்கு நீர் அழகு கருத்துக்குப் பொருள் அழகு செயலுக்கு விரை வழகு சென்னைக்குக் கடல் அழகு...!! குறிப்பு : நல்ல மனமும் நல்ல குணமும் நல்ல சிந்தனையும் நல்ல பேச்சும் நல்ல செயலும் இவைகள் நம்மிடம் இருந்தால் போதும் இதுதான் உண்மையான அழகு...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ ##ஷேர்சாட் டிரெண்டிங்
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:14

More like this