ShareChat
click to see wallet page
தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள தக்க தமிழராக இந்திய விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் 134வது பிறந்தநாள் இன்று ❤️🇮🇳🙏 தனது பதினேழாம் வயதில் தாய் நாட்டை விட்டுப் புறப்பட்டு ஜெர்மனிக்குச் சென்ற செண்பகராமன். அன்றைய ஜெர்மனியில் அதிபராக இருந்த வில்லியம் கெய்சர் என்பவரை தன்னுடைய அறிவுத் திறனாலும், ஆற்றல்மிக்க செயல்பாடுகளாலும் இவர் கவர்ந்தார். அங்கு சென்ற பின் இவர் பல மொழிகளைக் கற்றார்; புலமை பெற்றார்; பல பத்திரிகைகளையும் நடத்தினார் டாக்டர் பட்டமும் பெற்றார். அப்போது இந்தியாவில் நாட்டு மக்கள் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய நேரம். இவரோ வேறு விதமாகத் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவியோடு இந்தியாவை ஆட்சி புரியும் ஆங்கிலேயர்களின் மீது போர் தொடுத்து அவர்களை விரட்டிவிட்டு இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்ய எண்ணமிட்டார். அதன் பொருட்டு இந்தியர்களைக் கொண்ட ஒரு அமைப்பை ஜெர்மனியில் அமைத்தார். அதன் பெயர் “Indian National Volunteers”. இவர்தான் முதன் முதலில் தாய்நாட்டை வணங்க “ஜெய் ஹிந்த்” எனும் கோஷத்தை உருவாக்கி முழங்கினார். இவரது அடிச்சுவட்டில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைக்கவும், இவரது “ஜெய்ஹிந்த்” கோஷத்தை முழக்கமிடவும் தொடங்கினார். 1914 தொடங்கி முதல் உலக மகா யுத்தம் நடைபெற்றது. உலகக் கடல் பகுதியெங்கும் ஜெர்மானியப் போர் கப்பல்கள் உலவிவந்தன. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரின் கப்பல்களை உடைத்தெறியத் தொடங்கின. அப்படிப்பட்டதொரு கப்பல் “எம்டன்” எனும் பெயரில் சென்னை கடற்கரைக்கு வந்து சென்னை மீது குண்டுகளை வீசியது. இப்போதைய உயர்நீதி மன்ற வளாகத்தில்கூட ஒரு குண்டு விழுந்தது. அந்த கப்பலில் தலைமை இன்ஜினீயராக வந்தவர் செண்பகராமன் பிள்ளை. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் 'ராஜா மஹேந்திர பிரதாப்' அவர்களை அதிபராகவும், 'மவுலானா பர்கத் 'அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915-ல் ஆப்கானித்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார். #சுதந்திர போராட்ட தியாகிகள் தினம் 🌹🇮🇳🌹🇮🇳🌹 2023
சுதந்திர போராட்ட தியாகிகள் தினம் 🌹🇮🇳🌹🇮🇳🌹 2023 - ஜெய்ஹிந்த்செண்பகராமன் பிறப்பு 5செப்டம்பர் 189 திருவனந்தபுரம் இந்தியா மறைவு 26 ம1934 நாஜி ஜெர்மனி ஜெய்ஹிந்த்செண்பகராமன் பிறப்பு 5செப்டம்பர் 189 திருவனந்தபுரம் இந்தியா மறைவு 26 ம1934 நாஜி ஜெர்மனி - ShareChat

More like this