அழியா ஓவியம்
☀️☀️☀️☀️☀️☀️☀️
யார் அங்கே ...... அருகில் நிற்பது போல ....
என் கண்களை நம்பவில்லை கண்ணே நீ தானா
சிவந்த உடையில் புன்னகையால் பூத்து தோன்றுகிறாய்........
அந்த ஒரு நொடி என் உயிரே நின்றது,
“ ஆம்… நீ தான்!” என இதயம் உணர்த்தியது ...
அடி எடுத்து சென்றேன் உன்னை அணைக்க ஆனால் எங்கே என் கண்மணி?
நிழலே! நீயா எனக் கேட்டேன்… ஆம் என
உள்ளம் பதில் சொன்னது ...
“அவள் நினைவு தான், அவள் அல்ல…” என்று .....
நான் கையை நீட்டினேன் — பாசத்தோடு,
ஆனால் காற்று மட்டும் என் விரல்களைத் தொட்டது
அந்த காற்றின் ஸ்பரிசம் கூட அவளது சுவாசம் போல தோன்றியது
கண்ணே… என் கண்ணீரில் நீ இன்னும் விளையாடுகிறாய்,
என் நெஞ்சுக்குள் நீ இன்னும் சிரிக்கிறாய்,
ஆனால் என் கைகளில் — வெறும் வெறுமைதான்.
தூரத்தில் நீ
பேசாமல் இருந்தாலும் என் இதயத்தின் ஒலி நீயே
என் வாழ்வின் ஒவ்வொரு மூச்சும்
உன் பெயரையே நிசப்தமாகச் சொல்கிறது…
அருகில் நீ இல்லை ஆனாலும் நிழற் படத்தில்
என் தூரத்தில் நிற்கும் நெருக்கம்
கூட சுகமானதுதான்...
காலம் கடக்கும்
துள்ளலோடு ஓடி வருவாய் என் கை பிடித்து நடக்க...
நிழல் கூட நிஜமாகும்
நம்புகிறேன் என் அன்பான பிடிவாதத்தை ....
நீ வளர்வதற்குள் வந்து விடு மழலையாய்...
பிஞ்சு விரல் பிடித்து
மத்தாப்பூ போல சிரித்து
உன் கை பிடித்து உன்னோடு துள்ளி விளையாட என்னையும் குழந்தையாய் மாற்றிவிடு...
என் சுவாச காற்றே
என் இதயத்துடிப்பே
ரவி வர்மாவின் ஓவியமாய் பதிந்துவிட்டாய் ...
உன் பெயரை உச்சரித்தால் கூட
கற்கண்டாய் இனிக்கிறது என் நாவில் ....
கண்ணே பாப்பா
கனி முத்தம் சிந்த வா.....
Savittri Raju🌹 #கவிதை

