மைக்கேல் ஜாக்ஸன். இசையுலகின் முடிசூடா மன்னன். 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கனவு கண்டார்.
அதற்காக...
அவரது தலைமுடி முதல் விரல் நகங்கள் வரை தினமும் பரிசோதிக்க 12 மருத்துவர்களை வீட்டில் நியமித்திருந்தார்.
ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பும் ஆய்வகத்தில் அந்த உணவு சோதிக்கப்படும்.
படுக்கையறையில் ஆக்ஸிஜனை ஒழுங்குபடுத்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவருக்காக உடல் உறுப்புகளை தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர். அவர்களும் சிறப்பு மருத்துவர் குழுவினரின் கண்காணிப்பில் இருந்தனர்.
மருத்துவர்கள் ஆலோசனையின்றி ஓர் அடிகூட அவர் எடுத்து வைப்பதில்லை.
இவை எல்லாம் 150 ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும் என்ற கனவை நனவாக்க அவர் செய்திருந்த முன்னேற்பாடுகள்.
ஆனால்...
2009, ஜூன் 25 அன்று 50-வது வயதில் திடீரென அவரது இதயம் வேலை செய்ய மறுத்தது.
12 மருத்துவர்கள் சோதித்தனர். உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருந்து மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
எப்பயனும் ஏற்படவில்லை. இத்தனை ஏற்பாடுகளையும் மீறி மரணத்தின் பிடியில் அவர் அகப்பட்டார்.
அவரது மரணம்தான் அவரது கடைசி நேரடி நிகழ்ச்சி. அதை உலகம் முழுவது 2.5 மில்லியன் மக்கள் நேரலையில் பார்த்தனர். அது கொண்டாட்ட நிகழ்ச்சி அல்ல. மாறாக அதுவொரு பிரியாவிடைப் பயணம்.
மைக்கேல் ஜாக்ஸன் மரணத்துக்கு சவால்விட முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது.
பாடம் என்ன..?
உண்மையில் இந்த உலகில் நமக்குச் சொந்தமானது என்று எதுவுமில்லை. ஏன்..? நம் உயிர்கள்கூட நமக்குச் சொந்தமானவை அல்ல.
பணம் சேர்ப்பது பாவமல்ல! ஆனால் பணம் வைத்திருப்பதால் மட்டுமே பணக்காரர் என்று நினைப்பதுதான் பாவம்.
மனநிறைவு, திருப்தி, ஆரோக்கியம், நன்றியுணர்வு ஆகியவைதான் உண்மையான செல்வம்.
எதுவரை வாழ்கிறோமோ அதுவரை பிறருக்கு பயன்தரும் வகையில் வாழ்வோம். #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏

00:40