#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! #காலை தலைப்புச் செய்திகள் *இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி. உயிரிழந்த கிஷோர் என்பவரது வீட்டிற்கு நேரில் சென்று அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டது.
🗞️ கரூரில் 40 பேர் உயிரிழந்த விவகாரத்தை, இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை. நீதிபதிகள் எம்.தண்டபாணி, எம்.ஜோதிராமன் அமர்வில் பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
🗞️ தமிழ்நாடு அரசு அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தீவிரம். கரூரில் நடந்தது போன்ற சம்பவம் வருங்காலங்களில் நடக்காதவாறு தீர்வுகள் காணப்படும் என உறுதி.
🗞️ கரூரில் த.வெ.க. கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த தொண்டர்கள். கூட்டத்தினர் ஒரு பகுதியில் தரையில் விழுந்து கிடக்கும் அதிர்ச்சி காட்சிகள்.
🗞️ தவெக-வினர் போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கருத்து. விஜய் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை.
