ShareChat
click to see wallet page
ப்ரஹ்ம வித்யா ரஹசியம்-05. பரமாத்மாவின் ப்ரதி பிம்பம் ஜீவாத்மா… சிவ கீதை - 57. 🌺{அத்தியாயம்-{06 } மேலும் கூறுகிறது…. ஸ்லோகம்-09. தாந்த்ருஷ்டா தமயாதூவாந் லீலாகுலிதசேதஸ: - -தேஷாம் / அபஹ்ருதம்ஜ்ஞாநம்- ப்ரஹ்மாதீநாம்திவௌகஸாம்// கருத்து- எனக்கு வணக்கம் செய்த பாயிறகு அவர்களுக்கே உரிய கேளிக்கை,மற்றும், விளையாட்டுத்தனத்தில் ஈடுபட்டு தேவர்கள்,மதியிழந்து நின்றார்கள். எனவே அவர்களது’ஞானம் என்னால் அபகரிக்கப்பட்டது. ஸ்லோகம்-10. அஸ்தம்ஸ்த்தேஸக்ருதஜ்ஞாநாந் மாமாஹு: - -கோபவாநிதி / அதாப்ரைவஹம்தேவா நஹமேவபுராதந: // ஸ்லோகம்-11. ஆஸம்ப்ரதம்மேவாஹம் வர்தாமிசஸுரேஶ்வரா: / பவிஷ்யாமிசலோகேஸ்மிந்- -மத்தோதாந்யோஸ்திகஶ்சந // கருத்து- ஞானமிழந்த தேவர்கள் சோர்வுடன் அடிக்கடி உட்கார்ந்தார்கள், என்ப் பார்த்து’நீ’ யார் ? என அடிக்கடி கேட்டார்கள். நான் அவர்களைப் பார்த்து கூறினேன், ஹே தேவர்களே, நான் புராதனமானவன், பூர்வகாலத்தில் இருந்தேன்,ஸ்ருஷ்டி {படைக்கத் } தொடங்கும் முன்னும் இருந்தேன்,அதாவது’ப்ரளய காலத்திலும் இருந்தேன், இப்பொழுதும் இருக்கின்றேன், இனியும் இருப்பேன், இந்த ப்ரபஞ்சத்தில் என்னைத் தவர் வேறு எவரும் ப்ரளய கால்த்திற்கு முன்னும் பின்னும் நிகழ்காலத்திலும் யாருமில்ல. குறிப்பு- ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தேன், எனக் கூறியதால், நானே,ப்ரம்மனை தோற்றுவித்து, அவரால் ப்ரபஞ்சங்களை படைக்கவைத்தேன், என மகாதேவன் கூறுகிறார். இருப்பேன் என்பதால், எக்காலத்திலும் அழிவில்லாதவர், காலவரைக்கு உட்படாதவர் என்றும், ஏகாரத் தோற்றத்தால், அவ்வாறு வேறுயாருமில்லை எனவும் என்றார். மேலும்-ஶ்ரீ ருத்ரம்-அநுவாகம் 05- கூறுகிறது.. முதல் இரு மந்திரங்களில், இறைவன் புரியும் ஐந்து தொழில்களும் சொல்லப்படுகிறது. *நமோ பவாய ச ருத்ராய ச நமஸ சர்வாய ச…* 01-நமோ பவாய ச ருத்ராய ச. உலகின் படைப்பிற்கு காரணமான ஈசனை வணங்குகிறேன். 02-நமோ பவாய ச - இவ்வுலகின் காரணமாக, உலகின் முதல்வராக விளங்குகிறார். அவரிடமிருந்தே உலகம் தோன்றியது.அவரே மும் மூர்திகளாகவும் விளங்குகிறார். அவரிடமிருந்தே, இந்திரன் வருணன், போன்ற தேவர்கள் தோன்றினர். 03-ருத்ராய ச - ஈசன் தானும், உயிர்களும் ஒன்று என்பதை, உணர்த்தி, உயிர்களை பிறவித்தளைகளிலிருந்து விடுவிக்கிறார். அவரே மெய்பொருளாக இருக்கிறார் என அறிந்து கொள்வதன் மூலம் மனிதர்களின் துயரங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் “சூர்ய நமஸ்காரம்( அருணம்) இதிலும் அநுவாகம்-23 ம் விரிவாக ஸ்ருஷ்டியை கூறுகின்றது. . சிவ கீதை - 58. 🌺{அத்தியாயம்-{06 } ஸ்லோகம்-12. வ்யதிரிக்தம்சமத்தோஸ்தி- -நாந்யத்கிஞ்சித்ஸுரேஶ்வரா: / நித்யோநித்யோஹமநகோ- -ப்ரஹ்மணீம்ப்ரஹ்மணஸ்பதி // கருத்து- ஹே,மரணமில்லாத வாழ்கையைப் பெற்ற, தேவர்களே,நான் எங்கும் நிறைந்திருப்பவன், நானில்லாமல், மற்ற வேறொன்றும் இல்லை; நித்யனும், அநித்யனும் நான், சுத்தனும், ஸத்யோஜாதம் முதலிய பஞ்சபிரும்ஹங்களுக்கும், பிரும்ஹம் என்ற பெயருக்கு உரியவனும் நானே, இதைப் புரிந்து கொள்ளுங்கள். குறிப்பு-“நித்யனும், அநித்யனும் நான்” எனக் கூறப்படுவது, அவரவர் வினைப் பயன்களுக்கு ஏற்ப, மாயை உண்மை என அதன்பின் ஓடும், ஜீவன்(உயிரினங்கள்),அந்த மாயை கைபற்ற செய்யப்படும் சடங்குகளும் நானே, என ஈசன் கூறுகிறார். ஸ்லோகம்-13. தக்ஷிணாம்சதம்சோஹம் ப்ராஞ்ச: ப்ரத்யஞ்சேவச அதஶ்சோர்த்வஞ்சவிதிஶ: - -திஶ்ஶ்சாஹம்ஸுரேஶ்வர: // கருத்து- சிறப்புகள் மிக்க தேவர்களே,நான்கு திசைகளும், கீழே உள்ள பாதாள உலகமும்,மேலே உள்ள ஆகாயமும் நானே; மேலும் அறிந்து கொள்ளுங்கள்,தென்திசையில் உள்ளவைகளும், வடகிழக்குப் பக்கத்தில் உள்ளவைகளும்,கிழக்கே அமைந்திருப்பவைகளும்,மேற்கு திசையில் உள்ளவைகளும் நானே எனக்கூறுகிறார் சிவபெருமான். குறிப்பு- நான் எங்கும் நிறைந்திருப்பவன்… 💥🌺ஸ்ரீ ருத்ரம் காட்டும் சிவ ஸ்வரூபம்🌺💥 ஸ்ரீ ருத்ரத்தின் மகிமை சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும். வேதத்தால் துதிக்கும்போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான். அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது தந்துவிடுகிறது ஸ்ரீ ருத்ரம். எல்லா உலகமும் ஆகி ("ஜகதாம் பதயே") இருப்பவன் , எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம். அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின் இருதயங்களிலும் இருக்கிறான் ("தேவானாம் ஹ்ரிதயேப்ய) . அப்படி இருந்துகொண்டு ,வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான்(விசின்வத்கேப்யஹா). மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை , சேனாப்ய: சேனா நிப்யச்ச: என்கிறது ருத்ரம். அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் (க்ஷத்ருப்ய: ) ,தச்சர் வடிவிலும் (தக்ஷப்ய:) , குயவர் வடிவிலும் (குலாலேப்ய:) கருமார் வேடத்திலும்(கர்மாறேப்ய:) பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும்( புஞ்சிஷ்டேப்ய:) மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும்( நிஷாதேப்ய:) இருக்கிறான். சிவ ச்வரூபமோ தனித்தன்மை வாய்ந்தது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் (நீலக்ரீவாய); அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது (சிதிகன்டாய) . ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி (கபர்தினே) இருக்கிறது. மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட (வ்யுப்தகேசாய) தலை. ஆயிரக்கணக்கான கண்கள்(சகஸ்ராக்ஷாய) . குறுகிய வாமன வடிவுடைய (ஹ்ரச்வாய்ச வாமனாய்ச) அவனே , பெரிய வடிவத்துடனும் ( ப்ருஹதே) தோன்றுகிறான். பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான். வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் (ச்துத்யாய) வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும்( அவசான்யாய) விளங்குகிறான். ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, "பப்லுசாய" என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது. சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால் " பவச்ய ஹேத்யை " எனப்படுகிறான். பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று "தாவதே" என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா , அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், "தூதாய ச ப்ரஹி தாய ச " என்று காட்டுகிறது. தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, "ஸஹமானாய " என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் ( தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு அபராத க்ஷமாபநேச்வரர் (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர். நமஸ் ஸோமாய ச என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், "வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே " என்று பாடினார். இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சி வ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகிவிடுகிறான். சுவாமியைத் தொட்டு பூஜை பண்ணிய கைகள் அத்தன்மையை அடைந்து விடுவதை, "அயம்மே ஹஸ்தோ பகவான்" என்று சொல்லும் ஸ்ரீ ருத்ரம், அப்படிப் பூஜை செய்யும் வலது கை, நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகிவிடுவதாகக் கூறுகிறது. 🚩🕉🪷🙏🏻 #🙏ஆன்மீகம் #🙏பக்தி போதனைகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #ஆன்மீக கதைகள் #பக்தி கதைகள்
🙏ஆன்மீகம் - ShareChat

More like this