பழைய பேப்பர்!
மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த நாஞ்சில் சம்பத் 2012 டிசம்பர் 14-ஆம் தேதி திடீரென அன்றை முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். நாஞ்சில் சம்பத் அதிமுகவில் சேர்ந்த போது 250 மதிமுகவினரையும் அழைத்து வந்தார். அப்போது பேசிய ஜெயலலிதா, ‘’அதிமுகவில் சேர்ந்திருக்கும் உங்கள் நம்பிக்கை வீண் போகாது’’ என வாக்குறுதி கொடுத்தார். அந்த நம்பிக்கை என்ன ஆனது என்பதைச் சார்ந்தோர்கள் அறிவார்கள்.
அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்திற்கு அதே நாளில் இனோவா காரையும் பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா. அதன் பிறகு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக பல அணிகளாக உடைந்தது. இருந்தபோதிலும் நாஞ்சில் சம்பத், சசிகலாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போன பிறகு
டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இடையில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைப்பு நடந்தது. ஒரு கட்டத்தில் நாஞ்சில் சம்பத் ‘இனோவா’ சம்பத் எனக் கேலி செய்யப்பட்டார்.
’அதிமுகவில் இல்லாத நாஞ்சில் சம்பத் கழகம் சார்பில் பிரசாரத்துக்காக வழங்கப்பட்ட இனோவா காரை திருப்பி அளிக்க வேண்டும்’ என்று அதிமுக சார்பில் கோரப்பட்டது. 2018 ஜனவரியில் இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இப்போது தவெகவில் சேரும் போது நாஞ்சில் சம்பத் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. அங்கே அவருக்கு உடனே காரும் கொடுக்கவில்லை. பிறகு கொடுப்பார்களோ என்னவோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ’’துப்புனா துடைச்சிக்குவேன்’’ என முன்பு ஒரு முறை அரசியல் இலக்கணம் சொன்னவர் நாஞ்சில் சம்பத்.
#NanjilSampath #tvk #TVKVijay #தமிழ்நாடு அரசியல் #அரசியல் #🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம்

