#🌎பொது அறிவு
வரலாற்றில் இன்று.செப்டம்பர். 28
ஷீரடி சாய் பாபா பிறந்த தினம் இன்று(1838).
ஜாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களாலும் போற்றிக் கொண்டாடப்படும் ஆன்மீக மகான் ஷிர்டி சாய் பாபா செப்டம்பர் 28 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடியில் பிறந்தார்.
ஷீரடியில் பழைய மசூதி அருகே வேப்பமரத்தின் அடியில் 8 வயதில் தியானம் செய்தார். பின்னர், ஊரைவிட்டுச் சென்றார், 16 வயதில் ஒளிபொருந்திய தோற்றத்துடன் ஷீரடி திரும்பினார். அவரைப் பார்த்த பூசாரி, 'ஸ்வாமி" என்று பொருள்படும் வகையில் 'சாய்" என்று அழைத்தார். 'அப்பா" என்று பொருள்படும் வகையில் 'பாபா" என்றும் அழைக்கப்பட்டார்.
எண்ணிலடங்கா பக்தர்களால் போற்றி வழிபடப்பட்டு வரும் ஷீரடி சாய் பாபா 82ஆவது வயதில் மறைந்தார்.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
