ShareChat
click to see wallet page
#💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏🏻சரணம் ஐயப்பா #📸பக்தி படம் #🙏கோவில் சுவாமியே சரணம் ஐயப்பா வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்களை உள்ளது உள்ளபடி ஏற்கும் மனப்பான்மையை முழுமையாக வளர்த்துக் கொள். நீ எந்நேரமும் கவலைகளாலும் விரக்தியிலும் மூழ்கியே இருப்பதால் உன்னுடைய கடமைகளில் கவனம் சிதறுகின்றது. எப்பொழுதும் வீழ்ந்து கொண்டே இருக்கிறோமே என்று அருவிகளோ, காலையில் பூத்து மாலையில் வாடிவிடுவோமே என்று மலர்களோ வருந்துவதில்லை.. வீழ்ந்த அருவியே அகண்ட ஆறாக நாம் வாழ்வதற்க்கு தேவையான வற்றாத ஜீவ நதியாக ஒடுகிறது. ஒரு நாள் மட்டுமே பூத்தாலும் அப்பூக்கள் தான் இறைவன் அடி சேருகிறது. எனவே, நான் அடிக்கடி கூறுவது இங்கு எதுவும் நிரந்தரம் அல்ல. எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள். இவ்வுலகம் நம்மை எப்படி பார்க்குமோ என்று வருந்தாதே. இங்கு உள்ளவர்களின் பார்வைக்கு விளக்கம் அளிக்க முடியாது. சிலர் உன்னை திமிர் பிடித்தவர், கெட்ட எண்ணம் உடையவர் என்றும், சிலர் உன்னை அற்புதமானவர், அன்பானவர் என்றும் கூறுவார்கள். யார் எதைக் கூறினாலும் நீ உன் வாழ்வில் நேர்மையாகவும் உண்மையாகவும் இரு. உன் உழைப்பு என்றும் வீணாகாது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமேயானால் உன்னைப் பற்றிய மற்றவர்களின் மதிப்பீடுகளில் இருந்து, உன்னை மேம்படுத்த தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதே. தேவையற்ற வீண் சொற்களை மனதில் இருந்து அழித்து விடு. அச்சொற்களை மனதில் தேக்கி வைத்து உன் வளர்ச்சிக்கு நீயே தடையாக இருக்காதே. கவலைபடாதே நான் இருக்கிறேன் உன்னோடு என்றும் என்றென்றும். நல்லதே நடக்கும் நல்லதேதான் நடக்கும்.. நீ என் பரிபூரண அருளும் ஆசிர் வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை. -^- ॐ ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்வாமியே சரணம் ஐயப்பா -^- (Sabarimalai Ayyappan )
💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். - SABARIMALANOW BBARIMAAN00 SABARIMALANOW BBARIMAAN00 - ShareChat

More like this