فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌ
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
(அல்குர்ஆன் : 68:48)
فَاصْبِرْ صَبْرًا جَمِيْلًا
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
(அல்குர்ஆன் : 70:5)
وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا
அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
(அல்குர்ஆன் : 73:10)
وَ لِرَبِّكَ فَاصْبِرْ
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
(அல்குர்ஆன் : 74:7)
وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 76:12)
#🕌இஸ்லாம் # 🕋ALLAH is the CREATOR🕋 #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗
