ShareChat
click to see wallet page
*இன்றைய ஆன்மீக சிந்தனை* _________________________ *_நல்ல அறிவுரைகளே நாட்டுக்கு தேவை_* *___________________________* குழந்தைகளுக்கு நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த ஐயப்பாடும் இருக்க முடியாது. அவர்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டியதுதான், ஆனால், அது முரண்பாடுடையதாக இருக்கக் கூடாது. ஒரு முறை வியாபாரி ஒருவர் தன் மகனுக்கு வணிக தந்திரங்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தார். "நீ வாணிபத்தில் நாணயம், புத்தி கூர்மை இரண்டையும் பயன்படுத்த வேண்டும்" என்றார். பையன் தந்தையிடம், " நாணயம் என்றால் என்னப்பா?" என்றான். "நீ உன் வாடிக்கையாளனுக்கு ஒரு வாக்கு கொடுத்து விட்டாயானால், உனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், அந்த வாக்கை நிறைவேற்றுவது "என்று பதில் அளித்தார், தந்தை. அடுத்து மகன்," புத்தி கூர்மை என்றால் என்ன தந்தையே?" என்றான். "நீ அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்காமல் இருப்பது" என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம். இந்த வியாபாரியின் எடுத்துக்காட்டை குழந்தைகள் விஷயத்தில் நாம் பின்பற்றக் கூடாது. முரண்பட்ட அறிவுரைகள் எதிர்கால தலைமுறையை சத்தியப் பாதையில் இருந்து விலகச் செய்துவிடும். நாட்டிற்கு நல்லது என்றால் நல்ல அறிவுரைகள் தான் ஏனெனில் குழந்தைகள் தான் நாளைய நாட்டை ஆள இருப்பவர்கள்.✍🏼🌹 #god
god - ShareChat

More like this