திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் (19.08.2025) அன்று திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் செங்கம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, முன்னிலை வகித்தனர். செங்கம்
முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்
தமிழக முதலமைச்சரால் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். இம்முகாமில் 13 துறைகளின் கீழ் 43 சேவைகள் அளிக்கப்படுகிது. தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த ஜூலை 15 முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்ட இச்சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பல நலத்திட்டங்கள் மக்கள் வாழ்விடம் தேடி, இருப்பிடம் தேடி அவர்கள் வாசல் அருகே கொண்டு சேர்க்கிறது. இம்முகாமானது நமது மாவட்டத்தில் இதுவரை 228 இடங்களில் நடைபெற்று இருக்கிறது. இன்னும் 159 முகாம்கள் நடைபெற உள்ளது. அதன்படி செங்கம் வட்டாரத்தில் மட்டும் இதுவரை 10000 மனுக்கள் மற்றும் மாவட்டம் முழுக்க 118000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் மீதான நடவடிக்கை துரிதப்படுத்தவும். தரமான நடவடிக்கை எடுத்து கொண்டு திட்டத்தினுடைய பயனை மனுதாரர்களை சென்றடைய வேண்டுமென்பதால் அவ்வபோது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்முகாம்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு பட்டா மாற்றம், இருப்பிடச் சான்று, ஜாதி சான்று, மின் இணைப்பு பெயர் மாற்றம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் . க. தர்ப்பகராஜ் வழங்கினார்..
இந்நிகழ்ச்சிகலில்
திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையர் செல்வம்பாலாஜி , வருவாய் கோட்ட அலுவலர் ராஜ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
