ShareChat
click to see wallet page
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.09.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் -------------- பட்டாபிஷேகம் --------------------------- இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில் செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும் ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில் மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல் விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே . விளக்கம் ----------------- இப்படியாக வைகுண்டராக இருந்தபோது இட்ட எல்லாச் சாபமும் முடிவடைந்தன. மறுபடியும் தொடர்ந்து உருவாகும் மேகத்தைப் போன்ற வலி மிக்க எதிரிகள் உலகில் இல்லாத வண்ணம் முப்பத்திரண்டு அறங்களினால் ஆன சிங்காசனத்தில் அமர்ந்து வலிமை பொருந்திய வெற்றியையுடைய வைகுண்டமாமணி ஆனார். . . அகிலம் ------------- சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில் ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில் ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே . விளக்கம் ---------------- அவர் முப்பத்திரண்டு அறங்களினால் உருவாக்கி முடித்த சிங்காசனத்தில் அமர்ந்து தெய்வச் செங்கோல் நடத்தி எல்லா நல்லவையும் பொங்கி வருகின்ற தருமபூமியை ஆளுவார் என்னும் முன் ஆகம நூலின்படி ஏழு தெய்வக் கன்னிமாருடைய சான்றோர் மக்களும் ஒரே இனமாக்க் கூடி இருந்து வாழ வேண்டும் என்று நினைத்து ஆட்சி புரிய மேன்மையான அந்தச் சிம்மாசனத்தின் மேல் வைகுண்ட மாமணி அமர்ந்தார். . . அகிலம் -------------- அய்யா அருள்வாக்கு -------------------------------------- ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார் . விளக்கம் ---------------- எல்லாவற்றுக்கும் ஆதியாகிய வைகுண்ட அரசர் அருள் பொருந்திய செங்கோலை ஏந்திக் கொண்டு தரும சோதியின் ஒளி போன்ற இரத்தினங்கள் பொருந்திய திருமுடியைத் தலையில் சூடியவண்ணம், உயர்வு பொருந்திய நீதியைப் போன்ற தரும நியாயநெறியை நிலை நாட்டி அரசாட்சி புரிந்து வந்தார். அப்போது சாதியில் உயர்ந்த சான்றோர் சாதியினரை வரவழைத்து வைகுண்டர் அவர்களுக்கு ஞானமொழி உபதேசிக்க ஆரம்பித்தார். . . அகிலம் ------------- மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் . விளக்கம் ---------------- என் அருமை மக்களே, நீஙய்கள் எல்லோரும் நிலைத்த வாழ்வையுடைய பொன்னம்பதியை அடைந்து மேன்மையான தருமயுகப் பூமியில் வெளிப்படும் பொன்னையும், சொர்ணத்தையும் இன்னும் பல பொக்கிசங்களையும் கைகுளிரவும், மனங்குளிரவும் சேமித்து, அனுபவித்து எல்லாரும் புகழும்படியாக இனிய முறையில் அன்னமாகிய அமது உண்டு வாழ்வீராக. . . அகிலம் ------------- வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம் . விளக்கம் --------------- எந்தவித்த் தாழ்வும் இல்லாமல் உங்கள் மக்களோடும் அவர்கள் கிளைகளோடும் என்றென்னும் மகிழ்ச்சியடைந்து கொஞ்சிக் குலாவி நலமுடன் வாழ்ந்து வாருங்கள். இவ்வாறு வாழுகின்றபொழுது உங்களுடைய மனம் வருந்தி அலையாவண்ணம் உங்கள் நீதியும் நல்ல ஒழுக்கமும் உடையவராகச் செயல்படுத்த நான் செங்கோல் ஆட்சி புரிவேன். . . தொடரும்.... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரவா அரகரம் 4 இதின்மே ஏகவியா ழம்வரும்  க்கு லுன சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணன்மகனே அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே Olli Ill II 19.09.2018 அய்யா சிவசிவ சிவசிவா அரவா அரகரம் 4 இதின்மே ஏகவியா ழம்வரும்  க்கு லுன சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணன்மகனே அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே Olli Ill II 19.09.2018 - ShareChat

More like this