ShareChat
click to see wallet page
🦉சி.பி.முத்தம்மா காலமான தினமின்று🐾😢 🎓இன்று ஐ ஏ எஸ் அல்லது ஐ பி எஸ் என்ற சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத ஆசைப்படும் பல இளம் பெண்கள் இந்தப் பெயரை கேள்விப்பட்டிருக்கக் கூடுமா என்பது டவுட்தான். ஆனால் மூடத்தனத்தினால் எழுப்பப்பட்ட ஒரு மதில் சுவரை தனி ஒருவராக உடைத்து அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு வழி அமைத்தவர் அவர்.👀 நம்ம மெட்ராஸ் விமன் கிறிஸ்டியன் காலேஜிலும், மாநிலக் கல்லூரியிலும் படித்த சி. பி. முத்தம்மா (கொனெரி பெல்லியப்பா முத்தம்மா), கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில்தான் பிறந்தார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியடைந்த முதல் பெண். இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949-இல் பணியில் சேர்ந்தவர். இவர் டூட்டியில் சேரும்போது வெளியுறவுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பணி விதிகளின்படி, அந்தத் துறையில் பணிபுரியும் பெண் மேரேஜ் செய்றதுக்கு முன்னாடி கவர்மெண்டிடம் முன் அனுமதி பெற வேண்டுமென்று சொல்லின. அது மட்டுமல்ல, திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணியின் குடும்பப் பொறுப்புகள், வெளியுறவுத்துறையில் அவரது பணிக்குத் தடையாக இருக்கிறதென்று அரசு கருதினால், அந்தப் பெண் ராஜினாமா செய்ய வேண்டுமென அரசு நிர்பந்திக்கும் என்றும் அந்த விதிகள் சொல்லின. இதைப் போன்ற விதி ஆண்களுக்குக் கிடையாது. இந்தத் துறையின் இன்னொரு விதி, திருமணமான எந்தப் பெண்ணும் இந்தப் பணியில் சேரும் உரிமை தனக்கு உண்டென உரிமை கோர முடியாது என்றது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பும் உரிமையும் ஆண்களுக்கு மாத்திரமே உரியது. 25 வயதில் முத்தம்மா பணியில் சேரும்போது பணி நியமனக் குழுவின் தலைவர், ‘இந்த விதிகளை எடுத்துச் சொல்லி, வெளியுறவுத் துறையில்தான் நீ சேர வேண்டுமா?’ எனக் கேட்டபோது, ‘ஆமாம்’ எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவரை அந்தப் பணியில் சேர இயலாமல் செய்யும் நோக்கத்துடன், அந்த அதிகாரி அவருக்கு நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் அளித்தார். ஆனாலும் அவரது மற்ற மதிப்பெண்கள், அவர் நினைத்த வண்ணமே வெளியுறவுத் துறையில் சேர வாய்ப்பளித்தன. ஆனால் அவரது பிரச்சினை அத்துடன் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்குப் பின்னர்தான் ஆரம்பம் ஆயிற்று. ஏனெனில் அதன் பின் ஒவ்வொரு கட்டத்திலும் பலவிதமான பாலியல் பாகுபாடுகளுக்கு அவர் ஆளாக நேர்ந்தது.தொடர்ந்து முப்பது வருஷமா இத்தகைய பாகுபாட்டை எதிர்கொண்ட அவர் 1979-ம் வருஷம் , பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னாடி அரசின் இந்த விதியே பெண்ணுரிமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறதென்றும் பெண் என்பதாலேயே பணியில் அமர்வதற்கான உரிமை பாதிக்கப்படுவதென்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதென்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த வி ஆர் கிருஷ்ணயரிடம் அரசு இந்த விதிகள் நீக்கப்படும் என உறுதி அளித்தது. ஆக அரசு விதிகளில் இருந்த ஆணாதிக்கக் கருத்துக்களைத் தனது மன உறுதியாலும், விடாமுயற்சியாலும் உடைத்தெறிந்த முத்தம்மா. இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த அவர் டெல்லியில் தனக்குகு இருந்த 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் அறப்பணி அமைப்பிற்கு அளித்தார். இப்போது அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.❤ அப்பேர்பட்ட ரியல் அம்மணி தனது 85 வது வயதில் 2009ம் ஆண்டு இதேஅக்டோபர் 14ம் தேதி காலமானார். #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
தெரிந்து கொள்வோம் - #Celehratinglndia +DIDYOUKNOH C.B MUTHAMMA FIRST WOMANTO JOIN THE INDIAN FOREIGN SERVICE IN 1949 #Celehratinglndia +DIDYOUKNOH C.B MUTHAMMA FIRST WOMANTO JOIN THE INDIAN FOREIGN SERVICE IN 1949 - ShareChat

More like this