*தமிழர் சட்ட இயக்கம் சார்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பிரச்சனை தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.*
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட கொத்தன்குளம் கிராமத்தின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உண்மை தன்மையை ஆராய்ந்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்களின் வழிகாட்டுதலின்படி தமிழர் சட்ட இயக்கம் சார்பாக தலைவர். மதிப்புறு முனைவர். KPR. பார்த்திபன். தலைமையில் இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாமில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம். சில கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்..
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மண்டல தலைவர். தோழர். கண்மணி மாவீரன் வேளாளர், வழக்கறிஞர். ஜோ ரைமண்ட். இயக்கத்தின் பொருளாளர், வழக்கறிஞர் காளிராஜ். இயக்க நிர்வாகிகள், முப்பிடாதி , இசக்கிமுத்து, ராம், பெரியசாமி, சமூக ஆர்வலர். கிங்ஷன், கொத்தங்குளம் ஊரைச் சேர்ந்த, ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #திருநெல்வேலி #திருநெல்வேலி #தென்காசி #நெல்லை #அரசியல்

