ShareChat
click to see wallet page
*🌹அமலோற்பவ மாதா - பிதாவாகிய சர்வேசுரனின் அன்புள்ள குமாரத்தியாயிருக்கும் மகிமை..* நம் அன்புள்ள தேவதாயாரை பிதாவின் மகள், சுதனின் தாய், பரிசுத்த ஆவியானவரின் நேசம் என்று காலாகாலமாய் திருச்சபை பாராட்டி வருகிறது. "பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியானவராகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே என்று தொடங்கும் பழங்கால ஜெபம் தமிழக சுத்தோலிக்கர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாகும். ஜெபமாலையின் முதல் மூன்று அருள்நிறை மந்திரங்களைச் சொல்லும் போதும் "பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியாகிய பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகி பலனளிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும்" என்று தொடங்கும் மூன்று மன்றாட்டுகளும் நமக்குத் தெரியும். மாதா என்றால், பிதாவின் செல்வ மகள், சுதனின் அன்புத் தாய். பரிசுத்த ஆவியானவரின் ஞானப்பத்தினி என்பதெல்லாம் அவ்வன்னைக்கு இயல்பாகவே ஏற்பட்டவை என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும். வேத பிதாக்களின் போதனை: நமது அமலோற்பவ மாதா, பிதாவாகிய சர்வேசுரனின் செல்வ மகள் தான். இப்பெரும் வரப்பிரசாத சலுகை தன்னுடையது என்பதை அமலோற்பவ மாதாவே வேதாகமத்தில் கூறியுள்ளார்கள்” என அர்ச். அல்போன்ஸ் மரிய லிகோரியார் தெளிவாய்ச் சொல்கிறார். "மரியம்மாள் ஜென்மப் பாவம் படராமல் முழு விடுதலை பெற்றிருப்பது பொருத்தமே ஏனென்றால் அமலோற்பவ மாதா பிதாவின் முதல் மகளாக இருக்கிறார்கள்: "நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்தி சிருஷ்டிக்கப்பட்டேன்" (சீராக்:24:5) என்கிறார்கள். இவ்வார்த்தைகளை புனித வேதபாரகர்களும், வேத பிதாக்களும், திருச்சபையுமே அமலோற்பவ மாதாவைக் குறிப்பதாக தேவமாதாவின் அமலோற்பவ திருநாள் உரைகளில் கூறியுள்ளனர்" - என்கிறார். அமலோற்பவ மாதா தன் திருக்குமாரனுடன் இனைந்தவர்களாகவே முன் குறிக்கப் பட்டதனால், பிதாவின் முதல் மகளாக இருக்கிறார்கள் என்று டான்ஸ் கோட்டஸ் என்ற வேதபாரகரும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் கூறுகிறார்கள். வரப்பிரசாத முறையில், இரட்சகரின் தாயாக மாதா முன்குறிக்கப் பட்டதால் பிதாவின் தலை மூத்த மகளாக இருக்கிறார்கள் என்று அர்ச் தாமஸ் அக்வினாசும். அவரைப் பின் செல்கிற வேத அறிஞர்களும் கூறுகிறார்கள். ஆக வேத இயல் அறிவில் சிறந்த அனைவருமே அமலோற்பவ மாதாவை பிதாவாகிய சர்வேசுரனின் முதல் குமாரத்தி என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். அலெச்சாந்திரியா மேற்றிராணியா ராயிருந்த டெனிஸ் என்பவர். இன்னும் ஒருபடி. தாண்டி அமலோற்பவ மாதாவை "ஜீவியத்தின் ஒரு மகள் - ஒரே மகள் கன்னிமாமரி அன்னையே" என்கிறார். (contro Pa. samgt) மற்ற அனைத்து மகள்களும் பாவத்திற்குட்பட்டதால் அமலோற்பவ மாதா மாத்திரமே கடவுனின் குமாரத்தியாக இருப்பதாக அவர் கூறுகிறார். அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் மகா பரிசுத்த அமலோற்பவ மாதாவின் பெருவிழா வாழ்த்துக்கள்! ஆமென். நன்றி: www.catholictamil.com பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat

More like this