ShareChat
click to see wallet page
*🔴 ரூ.2500-க்கு மேல் துணி வாங்கினால் கூடுதல் ஜிஎஸ்டியா? தனி பில் வாங்கனுமா?... தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை! “தற்போது புதிய ஆடைகள் வாங்கும் போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால், 5% GST கட்டணம் செலுத்த வேண்டும். பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை. GST ஒவ்வொரு துணிக்கும் தனித்தனியாக (per-piece basis) விதிக்கப்படும், மொத்த பில் (bill) அடிப்படையில் அல்ல. அதன்படி சமீபத்திய GST வரி குறைப்பு எதிரொலியாக, ₹2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 5% GSTம், ₹2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 18% GSTம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ₹2,000 மதிப்புள்ள ஒரு சட்டை வாங்கினால் அது 5% GSTக்கு உட்படும். அதே நேரத்தில், ₹3,000 மதிப்புள்ள ஒரு blazer அதனுடன் சேர்த்து வாங்கினால், blazer க்கு 18% GST விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே GST கணக்கிடப்படும். எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை.... ☺️ #💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #செய்திகள் #📺வைரல் தகவல்🤩
💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 - SERIIICES AND 3 4 GST = 8 AND SERVICES  2632230789 shulleislockcom SERIIICES AND 3 4 GST = 8 AND SERVICES  2632230789 shulleislockcom - ShareChat

More like this