ShareChat
click to see wallet page
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் காலை நேர வாழ்த்துக்கள். *தேவன் எப்படி தம் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்?* எனக்கு அன்பானவர்களே, "கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ் 3:7). இதுவே தேவன் உங்களுக்குக் கொடுக்கும் இந்த நாளின் காலை வாக்குத்தத்த வசனம். அவர் தமக்கு அன்பானவர்களுக்கு தம்முடைய திட்டங்களை வெளிப்படுத்த விரும்புகிற தேவனாயிருக்கிறார். தெய்வீக இரகசியங்களை கேட்கும்படி இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டிருந்த யோவானைப்போல, நீங்கள் அவருடைய இருதயத்திற்கு நெருங்கியவர்கள். இன்றும் நீங்கள் இயேசுவின்மேல் சாய்ந்து, அவரது சிந்தையை அறிந்து அவரது திட்டத்தில் நடக்க முடியும். நீங்கள் கனத்துக்குரிய பாத்திரமாக, இயேசுவுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உலகத்திற்கும் பயனுள்ளவர்களாக இருக்க முடியும். இந்த தெய்வீக பணியை நீங்கள் நிறைவேற்றும்போது, கனம் உங்களைப் பின்தொடரும். தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட திட்டத்தில் நடக்கிறவர்கள் உலகத்திற்கு தேவையாயிருப்பதால் மக்கள் உங்களைத் தேடி வருவார்கள். ஆகவே, தேவன் தம்முடைய திட்டத்தை நமக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? உலக தோற்றத்திற்கு முன்பே தேவன் பிரபஞ்சம் எவ்வாறு இயங்கவேண்டும், மனிதன் எவ்வாறு வாழவேண்டும், வரலாறு முழுவதும் எவ்வாறு நடக்கவேண்டும் என்று திட்டம் பண்ணிவிட்டதாக வேதம் கூறுகிறது (எபிரெயர் 4:3). சத்துரு இடைப்பட்டு மனுஷனை பாவத்திற்கு நேராக வழிநடத்தி, உலகத்திற்கு தீமையை கொண்டு வந்தாலும், தேவனுடைய மெய்யான நோக்கம் எப்போதும் நன்மையானதாகவே இருந்தது. தேவன் ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். அவர் மனுவுருக்கொண்டு இயேசு என்ற பெயரில் வந்து, இழந்துபோனதை மீட்டுக்கொள்ளும்படியாக தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அவருடைய தியாகம், நம் வாழ்க்கையில் தயவை கொண்டுவருகிறதற்கு, நம்மை தீமையிலிருந்து விடுதலையாக்குவதற்கு, அவரது திட்டத்தில் திரும்ப நிலைப்படுத்துவதற்கு காரணியாயிருக்கிறது. ஆண்டவர் இயேசு இன்றைக்கு, "என் பிள்ளையே, உன் இருதயத்தை திறந்து என்னை ஏற்றுக்கொள்," என்று கூறுகிறார். அவர் வந்து உங்களோடு போஜனம் பண்ணுவார்; உங்கள் வாழ்க்கையைக் குறித்த தமது திட்டத்தை வெளிப்படுத்துவார். ஆண்டவரின் ஆவியாகிய பரிசுத்த ஆவியின் மூலமாக நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கலாம்; அவருடைய வார்த்தைகளை பேசலாம்; அவர் உங்களுக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கும் பாதையில் நடக்கலாம். இந்த உலகம் இருளினால் நிறைந்திருந்தாலும் நீங்கள் தேவனுடைய தயவை அனுபவித்து மகிழலாம். ஆகவேதான் தேவன் இன்றும் தீர்க்கதரிசனம் வாயிலாக பேசுகிறார். "கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" (அப்போஸ்தலர் 2:17) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அவருடைய சத்தத்தை கேட்கலாம்; அவருடைய திட்டத்தின்படி நடக்கலாம். இன்றைக்கு அவரை நோக்கிக் கூப்பிடுவீர்களா?ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - கர்த்தராகிய ஆண்டீ தீர்க்கதரிசிகளாகிற 8006om ஊழியக்காரருக்குதி தறது இரகசிஸத்தை வெளிபப்படுத்தாமல் காரியுத்தையும் செயியார் ஆமோஸ் 37 G७ / 3 கர்த்தராகிய ஆண்டீ தீர்க்கதரிசிகளாகிற 8006om ஊழியக்காரருக்குதி தறது இரகசிஸத்தை வெளிபப்படுத்தாமல் காரியுத்தையும் செயியார் ஆமோஸ் 37 G७ / 3 - ShareChat

More like this