தீபாவளி பண்டிகையன்று பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதற்கு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மற்றும் இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி:
