
J Saha on Instagram: "விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காலை 8.30 மணி அளவில் அச்சம்தவிழ்த்தான் கண்மாய் கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோவுக்கு வழி விடுவதற்காக ஓரமாக ஒதுங்கிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து கண்மாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மம்சாபுரம் இடையன்குளத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் விக்னேஷ் (24) உயிரிழந்தார். மேலும், புதுசெந்நெல்குளம் குடியிருப்பைச் சேர்ந்த மாரியம்மாள் (60), வீரலட்சுமி (40), சண்முகத்தாய் (55), ~ (29), வெங்கடேஸ்வரி (45), தனமாரி (35), கீழராஜகுலராமனைச் சேர்ந்த வீரகாளி (25) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #vairal #worldaccident #india #tamilnadu #viruthunagar #srivilliputhur #achamthavilthan #vanaccident #accident #accidentnews #sunnews"
