ShareChat
click to see wallet page
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! *🚨 காலை தலைப்புச் செய்திகள்* 📰 🗞️ டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 9 பேர் உயிரிழப்பு.. படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை 🗞️ டெல்லியில் கார் வெடித்த இடத்தில் என்ஐஏ, என்.எஸ்.ஜி. அதிகாரிகள் தீவிர விசாரணை. ஒருவரை பிடித்து விசாரணை நடத்துவதாக தகவல் 🗞️ கார் வெடிப்பு நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு.. அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி... 🗞️ டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிர வாகன சோதனை 🗞️ பீகாரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. 122 தொகுதிகளில் 3.70 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 1300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் 🗞️ டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமித் ஷாவிடம் நிலைமை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.. டெல்லி சம்பவம் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் 🗞️ இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலம் நெருங்கிவிட்டது.. முந்தைய ஒப்பந்தத்தை விட மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என டிரம்ப் பேட்டி 🗞️ பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. ஷாரூக், சல்மான் கான் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் மருத்துவமனையில் குவிந்தனர் #சன் தலைப்புச் செய்திகள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - இனிய காலை வணக்கம் இனிய காலை வணக்கம் - ShareChat

More like this