வடகிழக்கு பருவமழை: தீபாவளி அன்னைக்கு மழை வருமா? - பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்:
தீபாவளி அன்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த ஒருவாரமாக உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது.
சென்னை மற்றும் பிற கடலோரப் பகுதிகளில் இன்று முதல் திடீரென மழை பெய்யும். நாளை முதல் 18-ந்தேதி வரை காலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 19 மற்றும் 20-ந்தேதிகளில் தமிழகத்தில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்யும். தீபாவளி அன்று கண்டிப்பாக மழை இருக்கும். #வடகிழக்கு பருவமழை: தீபாவளி அன்னைக்கு மழை வருமா? - பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்:
