#💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💌 என் காதல் கடிதம் #💑என் முதல் காதல்😊 #💝இதயத்தின் துடிப்பு நீ
மாது-அறியப்படாத ஆளுமை
*********************************
மாதவள் மரபுக்கவிதையில்
உலாவரும் பைந்தமிழச்சி
மாங்கனி நகரில்
புதுக்கவியில் மிளிர்கிறாள்
இலக்கியத்தில் ஊடுருவி
தித்திக்கும் தேன்துளியவள்
இலக்கணத்தில் படர்ந்து
உணர்வோடு இனிக்கிறாள்
வார்த்தைகளில் பிறந்து
சிறகுகளில் பறக்கிறாள்
வானளாவிய உயர்ந்து
கனவுகளை விதைக்கிறாள்
சிந்தையின் எண்ணமதை
எழுதும் விரல்களே
சிறந்ததொரு காவியம்
நிலைத்து நிற்கும்
எதுகை மோனையில்
நித்தமும் வருவாள்
எங்கும் புன்னகையில்
வீசியே நகர்வாள்
வலியும் தாங்கி
அழாமல் பயணிப்பாள்
வலிமை பெற்று
சுடரொளி வீசுவாள்
ஆசைகளும் கனவுகளும்
நிறைந்து ஓடுபவள்
ஆனந்தமாய் வாழ்ந்திட
ஆதங்கத்தில் சுழலுகிறாள்
சட்டங்கள் படித்து
நாட்டையும் ஆளுவாள்
சரித்திரம் படைத்திட
சாதனையும் புரிவாள்
✍️ஆதி தமிழன்
