🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥
1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ ‘சரோஜா நினைவு நாளின்று😢
தமிழ் சினிமா பிதாமகர் இயக்குனர் கே சுப்ரமண்யத்தின் சகோதரர் கே விஸ்வநாதனின் மகள் பேபி சரோஜா. ஜனவரி 28, 1931ம் ஆண்டு பிறந்த சரோஜா, 1930களில் வெளிவந்த பல சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கினார். பால யோகினி (1937), தியாகபூமி (1938), காமதேனு (1939) உள்ளிட்ட பல படங்களில் நடிச்சு புகழ்பெற்றார். குடும்பத்தில் மொத்தம் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவரான பேபி சரோஜாவை, அவரது தாய் அலமேலு விஸ்வநாதன், சரோஜாவின் மாமாவும் பிரபல இயக்குனரிடம் மகளை அறிமுகம் செய்யச் சொன்னார்.
பாலயோகினி படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்தாய்ங்க. அப்படத்தில் பட்டு கவுன் பறக்க அழகான சுருட்டைத் தலைமயிருடன் கண்கள் விரியப் புன்னகைத்தவாறு பேபி சரோஜா பாடிய ‘கண்ணே பாப்பா’ பாடல் பெரும் ஹிட்டடித்தது. அந்த படம் வெளியான பிறகு,அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள் ஆவார். பேபி சரோஜாவை அனைவரும் இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர்.
அந்த படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைச்சாய்ங்க.சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்ற எட்டு திக்கும் சரோஜா பெயரே பேசப்பட்டது.
தியாகபூமி படத்தில் பாபநாசம் சிவன் எழுதிய ‘கிருஷ்ணா நீ பேகனே பரோ’ பாடலுக்கு பேபி சரோஜா ஆட அவரது அம்மா அலமேலு பாடினார்.நடிப்பது மட்டுமின்றி இசையில் பேபி சரோஜா புகழ்பெற்று விளங்கினார். காரைக்குடி சாம்பசிவ ஐயரின் சிஷ்யையாக வீணை கற்றுக் கொண்டவர் சரோஜா என்பது கூடுதல் தகவல். பேபி சரோஜா ஜப்பான் வரை பிரபலமானாராக்கும்.
அந்த காலத்திலேயே பேபி சரோஜாவின் முகம் அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகள் அங்கு பிரபலமாயிருந்தனவாம். சரோஜாவை ‘செர்லி டெம்பிள் ஆஃப் தமிழ் சினிமா’ என்றே அவர்கள் குறிப்பிட்டனர்.அதாவது இவரின் படம் வெளியானதும், அப்போது குழந்தைகள் பயன்படுத்தும் சோப்பு முதல் நோட்டுப் புத்தகங்கள் வரை அனைத்திலும் பேபி சரோஜாவின் படத்தைப் பதித்து விளம்பரத்தின் வாயிலாக லாபத்தை அள்ளி இருக்காய்ங்க .
அதே சமயம் அப்போ மிகவும் பிரபலமாக இருந்த காதர் இஸ்மாயில் அண்ட் கம்பெனி வெளிநாடுகளில் இருந்து சோப்பு இறக்குமதி செய்து அதில் பேபி சரோஜா படத்தினை வைத்து லாபம் அதிகம் பெற முயற்சித்தது. ஆனால் அது இந்திய விடுதலைப் போராட்ட காலம் என்பதால் அந்நியப்பொருட்களை வாங்குவதில்லை என்று மக்கள் புறக்கணித்தனர். பேபி சரோஜாவும் புறக்கணித்து, தனது எதிர்ப்பையும் வலுவாகப் பதிவு செய்தார்.
இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான பேபி சரோஜா,வுக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் நினைவஞ்சலி செய்கிறது #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
