கரூர் துயர சம்பவம்
அரசியல் மாற்றம்...ஆட்சி மாற்றம் வேண்டுமென்றால்...அதை வாக்கு செலுத்துவதில் காட்ட வேண்டும்...இந்த துயரச் சம்பவத்தில் எல்லோர் மீதும் தவறு இருக்கிறது...
உயிரிழந்தவர்களின் ஆன்மா
அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்...என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்...😔😔😔
1) 9 குழந்தைகள் இறந்ததற்கு முழு முதற் காரணம் 100% அந்தக் குழந்தைகளின் பெற்றோர் தான்... இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...
2) பிரச்சாரக் கூட்டம் நடந்த இடம்
குறுகலான பாதை என்பது உள்ளூர்காரர்களுக்கு மட்டும்
நன்றாக தெரியும்... வெளியூர்காரர்களுக்கு தெரியாது...அப்போ... உள்ளூர்காரர்கள்.. மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம்... வெளியூர்காரர்கள்...அந்தக் கூட்டத்திற்கு செல்வதை தவிர்த்திருக்கலாம்...அவர் தான் ஒவ்வொரு ஊராக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாரே...அப்போது அவரை பார்த்திருக்கலாம்... ஊர் விட்டு ஊர் சென்று ஏன்? பார்க்க வேண்டும்...அதை தவிர்த்திருக்கலாம்...
3) 39 பேருடைய மரணத்துக்கு
மூலக் காரணம்...அது யாராக இருந்தாலும்... நிச்சயம் இறைவன் நீதி மன்றத்தில் மட்டுமல்ல... மக்கள் நீதி மன்றத்திலும் தண்டனை உண்டு....குழந்தைகள் எதுக்கு இறக்குறோம்னு...தெரியாமயே இறந்துட்டாங்க....அவுங்க மரணத்துக்கு... காரணமானவங்களுக்கு
மன்னிப்பே கிடையாது!
4) சினிமா அரசியல் வேற....நிஜ அரசியல் வேற... சினிமாவில் பார்த்தது 10%...தான்...ஆனால் நிஜத்தில் 100%...இப்படித்தான்
நடக்குது... முதல்வன் படத்துல காட்டுனது கொஞ்சம்...
5) பலிகடா பொது மக்கள் மட்டும் தான்...
6) மற்றவர்களுக்கு இது ஒரு செய்தி... ஆனால், இழந்தவர்களுக்கு தான் தெரியும்....வலியும்... வேதனையும்...
7) பொதுமக்கள் கொஞ்சம் சிந்திக்கணும்...அன்றாடம் நாம வேலைக்கு போனா தான் சாப்பாடு என்ற நிலையில்...
சரியானவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிப்பதோடு நிறுத்திக்
கொள்ள வேண்டும்... காசு...பணம்...இருக்கிறவுங்க
கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்...அவர்களுக்கு
என்ன கவலை? வந்தால் மலை...போனால்...மடு....
அவ்வளவு தான்...ஆனால்... பாமரர்களுக்கு...? ஜனநாயகக் கடமையை ஆற்றுவதோடு நிறுத்திக் கொள்வது நல்லது!
ஒரு கட்சித் தலைவர்...இல்லைன்னா
இன்னொரு கட்சித் தலைவர்..
ஆனா....நம்ம குடும்பத்துக்கு....நாம் தான்...
இருக்கோம்...இதை ஒவ்வொருவரும்... உணர்ந்து
சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும்... #🚹உளவியல் சிந்தனை
