#magill vithu magill. மகிழ்
காலம் நமக்குப் புரிய வைப்பதில்லை. விளக்கங்கள் நமக்குப் புரிய வைப்பதில்லை.
நம்மை புரிந்துகொள்ள வைப்பது ஒன்றின் உண்மையை அக்கணமே பார்ப்பதுதான் - வார்த்தைகள் மற்றும் விளக்கங்களின் வரையறைகள் அல்ல, அமைப்புகள், தர்க்கங்கள் அல்ல, மாறாக ஒன்றை உண்மையாக, உடனடியாகப் பார்ப்பதுதான்.
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் சகாப்தம் இல்லாமல் போகும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு எல்லாம் இருக்கும் குடும்பத்தில் ஓவ்வொரு ஒற்றுமையை இல்லாமல் போகும்
-----------------------------
நீ யாருக்கு உதவுகிறாயோ அவனே உன் முதல் எதிரி....
யாரை நம்புகிறாயோ அவனே உன் முதல் துரோகி......!!
*🚩பகவத்கீதை🚩*
சாதாரண அறிவையும் தெய்வீக அறிவையும் நான் உனக்கு முழுமையாக அறிவிக்கின்றேன். யாராயினும் இவ்விரண்டு அறிவையும் முழுமையாக அறிந்து கொண்டால், முழுமையாக அறிந்ததற்கு ஒப்பாகும். எனவே, இதனை அறிந்த பின் நீ அறிய வேண்டியவை ஏதும் இருக்காது.
- *🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்🚩
திருட தைரியம்
இல்லாதவர்கள் பிச்சை
எடுக்கிறார்கள்.
பிச்சை எடுக்க
வெட்கப்படுபவர்கள்
திருடி விடுகிறார்கள்..
இவ்விரண்டையும் சேர்த்தே
செய்ய விரும்புவர்கள்
லஞ்சம் வாங்குகிறார்கள்..
மனசாட்சிக்குப் பயந்து
மனிதனாக வாழ
நினைப்பவர்கள்
உழைத்து வாழ்கிறார்கள்.!
இனிய காலை 💐
அமைதியின்மையின் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு மற்றவர்களுக்கு பதில் சொல்வதால் தவறான புரிதல்களும் நாமே வருத்தப்படும் செயல்களும் நடக்கின்றன. அப்போது எடுக்கப்படும் பெரும்பாலான முடிவுகள் சரியாகவும் இருப்பதில்லை.
காலையில் எழுந்ததும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அமைதியாக ஏதாவது ஓர் இடத்தில் அமர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் மேற்கூறிய அனைத்தையும் படிப்படியாக தவிர்க்க முடியும். மேலும் அந்த நாளையே அழகாக மாற்றவும் முடியும்.
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
9. #ராஜவித்யா_ராஜகுஹ்ய_யோகம்
பாகம்__11
🙏27." கௌந்தேய, நீ எதைச் செய்தாலும், எதைப் புசித்தாலும், எதை ஹோமம் பண்ணினாலும், எதைத் தானம் பண்ணினாலும், எத்தவத்தைப் புரிந்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்". 🙏
விளக்கம்: கௌந்தேயன்= குந்தியின் மகன். வாழ்க்கையில் வந்தமையும் நிகழ்ச்சிகளை எல்லாம் இவ்வாறு ஈஸ்வரனுக்கு அர்ப்பணமாகச் செய்வதற்குத் தெரிந்து கொண்டால், அதுவே "ஈஸ்வர ஆராதனை".
இதுவே வாழ்க்கை, இறைவனின் ஆராதனையாக, இனிதே அமைகிறது. வாழ்க்கையே ஒரு இடையறாதத் தெய்வ ஆராதனை ஆகிறது. செய்வது தீவினையாக இருந்தாலும், அதை இறைவனது கைங்கரியம் என்ற எண்ணத்தோடு செய்யும் பொழுது, அந்த இறைநினைவு வலுக்க வலுக்கத் தீவினை ஒழிந்து, நல்வினை நிலைபெறுகிறது.
மனிதன் உணவின் மீது வைத்துள்ள பற்றானது, போகப் பிரியத்துக்கு அறிகுறியாகும். உணவில் வைத்துள்ள நாவாசையை அடக்காதவரை, மனிதனால் ஆசைகளை அடக்க இயலாது.
ஆனால் உணவு உண்பதையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும்பொழுது அதுவே ஈஸ்வர ஆராதனையாகிறது. இவ்வாறு பழகப் பழகப். போகமானது, யோகமாக மாறியமைகிறது. நீ எதைத் தானமாகக் கொடுத்தாலும் அதையும் பகவானுக்கு அர்ப்பணமாக செய்ய வேண்டும். எதையும் கொடுக்காத கருமியை விட, தானம் செய்பவன் மேலானவன். "ஈதல் அறம்" எனப்படுகிறது. தானம் செய்வதை "நாராயண சேவையாக" நினைக்கும் பொழுது, நமது அகங்காரம் குறைகிறது.
கடவுளுக்குப் பூஜை செய்யும் பாவனையே தானம் செய்வதிலும் வந்து அமையவேண்டும். "தவம் புரிதலை" யோகத்தில் சித்தி அடைவதன் பொருட்டு ஒருவன் செய்யக் கூடும். அது "காமிய தபசு" ஆகிறது. அதனால் ஜீவபோதம்குறைந்து "பரபோதம்"(பகவானின் நினைவு) வளர்கிறது.
"தபசிகளுக்கிடையில் நான் தபஸாக இருக்கிறேன்" _ என்று பகவான் (அத்தியாயம் _7 சுலோகம் _9) கூறியுள்ளார்.
ஆகையால் "தவம்"(தபசு) என்னும் தெய்வ சம்பத்து பரமாத்மாவிடத்தில் இருந்து வந்ததே. அதனால் 'பரம்பொருளின் பெருமையை நிலை பெறுக' என்று எண்ணி தவம் புரிதலே சாலச்சிறந்தது. தவத்தையும் பரமாத்மாவிற்கு அர்ப்பணமாகவே செய்ய வேண்டும்.
இவ்வாறு வாழ்க்கையில் வந்தமைந்துள்ள செயல்களெல்லாம் "ஈஸ்வர ஆராதனை" ஆகின்றன. நாம் தானம் செய்தாலும், "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி செய்யும் பொழுது அது பகவானையே சேர்கிறது. அதனால் ஜீவபோதம் குறைந்து, பரமாத்மாவின் நினைவே மேலோங்குகிறது. "எல்லாம் அவன் செயலே" என்ற திருக்காட்சி அமையப் பெறுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது, நமது செயல்களெல்லாம் பரமாத்மாவிற்கே ஆராதனை ஆகின்றன.
எனவே #அர்ஜுனா நீ எதைச் செய்தாலும் எதை உண்டாலும் எதை ஹோமம் பண்ணினாலும், எதைத் தானம் அளித்தாலும், எந்தத் தவத்தைச் செய்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாகச் செய்! என்கிறார் #ஸ்ரீகிருஷ்ண_பரமாத்மா. 🙏
__
