ShareChat
click to see wallet page
#sneha die hard fan #ரெங்கா! #renga-vamba! *இன்றைய தலைப்புச் செய்திகள்!* #சன் தலைப்புச் செய்திகள் 🗞️ ஹரியானா வாக்குத் திருட்டு பற்றி ராகுல் வெளியிட்ட ஆதாரங்கள் அதிர்ச்சி தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து. மக்கள் தீர்ப்பு திருடப்படும்போது தேர்தல் ஆணையம் மவுனம் காப்பதாகவும் கண்டனம். 🗞️ பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு. 🗞️ வாக்கு திருட்டு தொடர்பான புதிய ஆதாரங்களை வெளியிட்டார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. 🗞️ முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம். 2026 தேர்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி என மீண்டும் திட்டவட்டம். 🗞️ திமுக - தவெக இடையேதான் போட்டி என கூறிய விஜய்க்கு வலுக்கும் கண்டனம். 2 ஆண்டுகால கட்சியின் தலைவர், 75 ஆண்டுகால திராவிட இயக்கத்தை பார்த்துச் சொல்வதா என தலைவர்கள் காட்டம். 🗞️ கரூர் கொடுந்துயருக்கு முழு பொறுபேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற முறையில் திசை திருப்ப முயற்சிப்பதாக வைகோ கண்டனம். விஜயின் நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும் என்று எச்சரிக்கை. 🗞️ கோவை மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் வரும் 19-ம் தேதி வரை சிறை. கோவை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை அடுத்து சிறையில் அடைப்பு. 🗞️ ஒசூரில் பெண் தொழிலாளிகள் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய இளம்பெண் கைது. வீடியோவை பகிர்ந்த ஆண் நண்பரை தேடுகிறது போலீஸ் 🗞️ கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படம். சுந்தர்.சி இயக்கவுள்ள திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு 🗞️ சென்னை ராயப்பேட்டையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு. ஃபேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்தவரும் உயிரிழந்த பரிதாபம்; மற்றொரு இளைஞரின் கால் துண்டானது.
sneha die hard fan - 00@]0@]@][8{72 00@]0@]@][8{72 - ShareChat

More like this