இன்றைய நவீன யுகத்தை செல்ஃபோன் யுகம் என்றும் இன்டர்நெட் யுகம் என்று கூறும் அளவுக்கு மக்களிடம் அதன் பயன்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் 5ல் 3 நபர்கள் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள். இந்த இணையதள யுகத்தில் காலையில் மூமினாக இருப்பவர் மாலையில் காஃபிராக மாறும் அவலம் நம் கண்களில் தென்படுகிறது இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை!
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று வரவிருக்கும் குழப்பத்திற்கு முன்னால் நற்செயல்களில் போட்டி இடுங்கள். அந்தக் குழப்பம் வந்தால் ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 186 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
