ShareChat
click to see wallet page
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் வேப்பூர் அருகே மக்காச்சோள வயலில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் நேற்று (16/10/25) இடிதாக்கி இறந்துவிட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள மற்றொரு பெண் கண் பார்வையை இழந்திருக்கிறார் ) வயக்காட்டு வேலைக்கு ஆத்தா போயிருக்கு வருஷம் பூரா உழைச்ச காசுல புது துணி எடுத்து குடுத்துருச்சு களைப்பறிச்ச காசுல பலகாரம் சுட்டுத் தாரேன் பட்டாசு வாங்கித் தாரேன்னு ஆத்தா சொல்லியிருக்குன்னு ஆசையோட பள்ளிக்கூடம் போன புள்ளைங்க கிட்ட களை எடுக்க போனவங்கள காலன் கொண்டு போயிட்டான்னு இரக்கமில்லாம இடி இடிச்சு எமன் கொண்டு போயிட்டான்னு எப்படிய்யா சொல்லுறது பிஞ்சுகளுக்கு என்ன சொல்லி புரிய வைக்கிறது. கதறி துடிக்கிற சனத்தை என்ன சொல்லித் தேத்துறது இடியே உன்மேல் இடி விழாதா.... வயக்காட்டு தெய்வங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்... 😥😥😭😭 #தெரிந்து கொள்ளுங்கள் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
தெரிந்து கொள்ளுங்கள் - ShareChat

More like this