தமிழ்நாட்டினை வஞ்சிக்கும் செயலுக்கு ஒன்றிய அரசின் செயலுக்கு துணைபோகும் உச்சநீதிமன்றம் :-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்ய மத்திய நீர் வள ஆணையம் (CWC) கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
2019ல் மேகதாது அணை கட்டுமானப் பணிக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வழங்கக்கோரி கர்நாடக அரசு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகியபோது இரு மாநிலங்களுக்கிடையே சுமுகத் தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் எனக் கூறியிருந்தது.
சுற்றுச்சூழல் அமைச்சகமே இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்ட பின்னர் இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான எந்த அவசியமும் இல்லை.
தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் களத்திலும் அரசும், எதிர்கட்சிகளும், விவசாய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் கர்நாடக அரசின் முயற்சிகளை கடுமையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பூவுலகு சுந்தர்ராஜன் #பூவுலகின் நண்பர்கள் #மேகதாது அணைகட்ட அனுமதிக்காதே! #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #தமிழ்நாடு

