#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
*நவம்பர் 11, 1930*
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தன் (முன்னாள்) மாணவரான லியோ சிலார்ட் உடன் இணைந்து உருவாக்கிய குளிர்பதனப் பெட்டிக்கு இன்று காப்புரிமை வழங்கப்பட்ட நாள்.
இது தற்போது நாம் பயன்படுத்தும் குளிர்பதனப் பெட்டி அல்ல.
உண்மையில் இதற்கு முன்பே குளிர்பதனப் பெட்டி பயன்பாட்டில் இருந்தது.
பெர்லினில், குளிர்பதனப் பெட்டியில் ஏற்பட்ட கசிவினால், நச்சு வாயுக்கள் வெளியாகி ஒரு குடும்பமே பலியான செய்தியைப் படித்ததால், நச்சு வாயுக்கள் பயன்படுத்தப்படாத ஒரு குளிர்பதனப் பெட்டியை ஐன்ஸ்டீன் உருவாக்கினார்.
நாம் தற்போது பயன்படுத்தும் குளிர்பதனப் பெட்டியில் ஒரு மோட்டார் மூலம் கம்ப்ரசர் இயக்கப்படுகிறது. ஆனால், அசையும் பாகங்களே இல்லாமல் உருவாக்கப்பட்டது ஐன்ஸ்டீன் குளிர்பதனப் பெட்டி.

