ShareChat
click to see wallet page
விலங்குகளைப் பலியிடும் மத வழிபாட்டு உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்.! ------------------------------ இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையில் விலங்குகளைப் பலியிடும் (குர்பானி) நடைமுறையை, விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறுவதாகக் கூறி, அரசுத் தரப்பை மட்டும் எதிர் மனுதாரராகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு, இஸ்லாமிய சமூகத்தை மட்டுமல்லாமல், இந்து கோவில்களில் நடைபெறும் ஆட்டுப் பலி போன்ற பாரம்பரிய மதச் சடங்குகளையும் எதிர்காலத்தில் பாதிக்கக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனுதாரர் கூற்றுப்படி, விலங்குகள் சட்டம் விலங்குகளை வெட்டுவதற்காக அமைக்கப்பட்ட மையங்களில் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே விலங்குகள் வெட்டப்பட வேண்டும் என்று கூறுவதாலும், தமிழ்நாட்டின் உள்ளாட்சி சட்டங்களில் (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி சட்டங்கள்) முன்பு இருந்த மதச் சடங்குகள் மற்றும் பண்டிகைகளுக்கான விலங்குப் பலி விலக்கு, 1998-ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது என்பதும் கவலைக்குரிய விஷயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26-இன் படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மத நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்குப் பலி என்பது இஸ்லாமியர்களின் குர்பானி, இந்துக்களின் கோவில் சடங்குகள் உள்ளிட்ட பல மதங்களின் அடிப்படை வழிபாட்டு நடைமுறைகளில் இன்றியமையாத பகுதியாக உள்ளது. இத்தகைய உரிமைகளைப் பாதுகாப்பது, மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசின் கடமையாகும். ஆனால், தற்போதைய சட்ட வெற்றிடம் காரணமாக, இந்த வழக்கின் தீர்ப்பு மனுதாரரின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அமைந்தால் அது அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகளையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடும். ஆகவே தமிழ்நாடு அரசு, 1998 நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் மதச் சடங்குகள், பண்டிகைகள் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலி விலக்கை உடனடியாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தை மீறாமல், மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். இது இஸ்லாமியர்களின் குர்பானி, இந்துக்களின் கோவில் பலிகள் உள்ளிட்ட அனைத்து மதங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையாக அமையும். மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு மத சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் வாதிட வேண்டும். பாதிக்கப்படும் சமூகங்களை எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத சுதந்திரம் என்பது இந்தியாவின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதால், அனைத்து மதங்களின் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SDPI #SDPIPartY #SDPITamilnadu #SDPIPeoplePolitics #SDPIRealAlternative #NellaiMubarak #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📷வாட்ஸப் DP #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
📺வைரல் தகவல்🤩 - [ 9 ٩ 9 விலங்குகளைப் பலியிடும் 3 மத வழிபாட்டு உரிமைகளுக்கு 2 ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க ; ಕ್ಗ தமிழக அரசுக்கு எஸ்டிபிஐகட்சி வலியுறுத்தல்! நெல்லை முபாரக் MA மாநில தலைவர் SDPI ಹL*81 SDPI சோசியல் பயாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி தமிழ்நாடு @@ Isdpitamilnadu | [ 9 ٩ 9 விலங்குகளைப் பலியிடும் 3 மத வழிபாட்டு உரிமைகளுக்கு 2 ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்க ; ಕ್ಗ தமிழக அரசுக்கு எஸ்டிபிஐகட்சி வலியுறுத்தல்! நெல்லை முபாரக் MA மாநில தலைவர் SDPI ಹL*81 SDPI சோசியல் பயாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி தமிழ்நாடு @@ Isdpitamilnadu | - ShareChat

More like this