#🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏
*எப்போதும் இனிமையாக*...
*எப்போதும் இனிமையாக பேசுங்கள்*...🌹
ஒருவர் வெகுநாட்களாக கொடியநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, சமயகுரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.
வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்த நோயாளியை பார்த்த சமயகுரு, ‘நாம் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்’ எனக்கூறி மனமுருக அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அனைவரும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.
பிறகு சமயகுரு, ‘இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகிவிடும். இத்தனை பேரும் உங்களுக்காக வேண்டியிருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும்’ எனக் கூறினார்.
அந்த கூட்டத்தில் ஒருவன் சமயகுரு சொன்னதைக் கேட்டதும் நையாண்டித்தனமாக சிரிக்கத் தொடங்கினான்.
‘வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா?’ எனக்கூறி சிரித்தான்.
அதற்கு அந்த சமயகுரு, ‘இந்தக் கூட்டத்திலேயே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்’ எனச் சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், ‘நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை அடித்துக் கொன்று விடுவேன்’ என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.
பதற்றமே இல்லாத அந்த சமய குரு, ‘முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, இந்தக் கடுமையானச் சொற்கள் உங்களை கொலை செய்யுமளவிற்குத் தூண்ட முடியுமென்றால், நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்’ என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான்.
நம் வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. ‘கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்’
இனிமையான வார்த்தைகள் நேர்மறையான மாற்றங்களையும், தீமையான வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
வார்த்தைகள் கூர்மையானப் பட்டயம் போன்றவை. பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து அதன் தன்மை வெளிப்படுகிறது.🌹

