எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட காக்கும் கடவுளான பெருமாளை, புரட்டாசி மாதத்தில் சரணடைந்தால், துன்பங்களை நீக்கி, பெருமாள் நம்மை காத்து அருள்வார் என்பது நம்பிக்கை. பொதுவாக எந்த மாதமாக இருந்தாலும் சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவது நல்லது. அப்படி மற்ற மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட முடியாமல் போனாலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபடுவதால் பல மடங்கு அதிகமான பலன் கிடைக்கும். பெருமாளின் அருளும், சனி பகவானின் அருளும் கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும்.
புரட்டாசி மாதம், பெருமாள் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை விரதம் மட்டுமின்றி அனந்த பத்மநாப விரதம், ஏகாதசி விரதங்களும் சிறப்பு மிக்கவையாகும். இந்த ஆண்டு புரட்டாசியின் முதல் நாளிலேயே ஏகாதசி விரதம் அமைந்திருப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை படைத்து வழிபடுவதும் மிகவும் சிறப்புக்குரியதாகும். புரட்டாசி மாதத்தின் முதலில் பெருமாளுக்கு மாவிளக்கு, தளிகை போட்டும் வழிபடலாம். அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையானை மனதார நினைத்து வழிபடலாம். பெருமாளுக்குரிய மந்திரங்களை சொல்லுவதும், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதும் பெருமாளின் பரிபூரணமான அருளை பெற்றுத் தரும் #காலை வணக்கம் நண்பர்களே #👌அருமையான ஸ்டேட்டஸ் #பொதுமக்கள் விருப்பம் @ #தேய்பிறை சர்வ ஏகாதேசி #🙏 வைகுண்ட ஏகாதேசி பெரு விழா 🙏

00:15