ஒரு கவிதையை எழுத
ஒரு அழகான
காதல் தேவைப்படுகின்றது
அந்த காதலின் ஆழத்தை எழுத
நிறைய காயங்கள்
தேவைப்படுகின்றது.!!
அந்த காயங்களில் வெளி வரும்
வார்த்தைகளை மெருகூட்ட
சில தேன் தடவிய பொய்கள்
தேவையாக இருக்கின்றது...!!
இத்தனையும் சேர்த்து
சுமந்து அதிலிருந்து
மீண்டு வெளியே வருவதற்கு
ஒரு இரும்பாலான இதயம்
தேவை படுகின்றது... !!
ஆனால் அந்த இரும்பாலான
இதயமும் கூட
துருப்பிடித்த நினைவுகளால்
இறுதியில் சிதைந்தே போய் விடுகிறது..!!
சுனில்....!! #s

00:15