*செப்டம்பர் 28,*
*பகத் சிங்*
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.
கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.
சைமன் குழு 1928-ல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.
இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.
ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 24-வது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு #அரசியல்
