#💖நீயே என் சந்தோசம்🥰 #📝என் இதய உணர்வுகள் #💌 என் காதல் கடிதம் #💑என் முதல் காதல்😊 #❤️எங்கேயும் காதல்
மாது - அதிசயமான புதையல்
**********************************
காதலும் கரைபுரண்டு
பரவசம் பொங்கிடும்
காலங்களில் வாழ்வும்
தேனாய் தித்திக்கும்
என்னிதயம் வென்று
புன்னகைக்கும் வஞ்சிக்கொடி
எழில்மிகு வண்ணம்
வானவில் காதலி
மழலைக் குரலில்
கொஞ்சிடும் தேவதை
மங்கையின் பேரழகோ
மஞ்சள் நிலா
தாமரை இதழ்களில்
தேன்முத்தம் கொடுத்திடுவாள்
தாகம் தீர்க்கும்
அமுதமான பேரூற்று
நெஞ்சினில் ஆசையை
தேக்கியே வைத்தேன்
நெடுந்தீவில் நித்தமும்
இருவரும் மகிழ்வோம்
மதுரசம் அருந்திட
பரவசம் பொங்கிடும்
மலரும் மணம்வீசும்
ஈடில்லா பேரன்பிலே
கவிதையில் அழகாய்
மிளிர்ந்து வருவாள்
கண்களில் பேசியே
இதயத்தில் கலந்திடுவாள்
தேன்மொழி அழகோ
மின்னலில் மிளிர்கிறது
தேவதையின் நேசமும்
காலமெல்லாம் தொடரும்
ஆதி தமிழன்
