🦉இதே அக்டோபர் 14
சுந்தர ராமசாமி காலமான நாளின்று , 😢
நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர்.
பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.
(சாம்பிள் :நம்பிக்கை
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்).
நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள். 50களின் இறுதியில் எழுத ஆரம்பித்த ‘ஒரு புளிய மரத்தின் கதை’ நாவலை 1966-ல் எழுதி முடித்தார்.
அடுத்து ஜே ஜே சில குறிப்புகள் வெளிவந்த காலத்தில் இன்று பாகுபலி போல தமிழ் நாடு முழுக்க பிரம்மாண்டமாக பேசப்பட்டவர். 82 முதல் 92 வரையிலான பத்தாண்டு காலத்தில் ஜே ஜெ மிகப்பெரிய பாதிப்பை தமிழ் சூழலில் நிகழ்த்தியிருந்தான். ஜே ஜேவை படித்து விட்டு பலரும் ஜே ஜேவாக தங்களை கற்பனை செய்துகொண்டு பிதற்றிய காலம் அவை..
1988-ல் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழைத் தொடங்கினார். உயர் தரமான படைப்புகளும், புதிய சிந்தனைகளும் இதில் வெளிவந்தன. தற்போதும் இது மாத இதழாக வெளிவருகிறது #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
