திருவண்ணாமலை மகா தீபத்தின்போது மலையின் உள்ளே கேட்கும் சத்தத்தின் ரகசியம்!
T.Malai - நடைபெறும் தீபத் திருவிழா தனித்தன்மை வாய்ந்தது. இதற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த தீபத்திற்கு கார்த்திகை விளக்கீடு, ஞான தீபம், சிவ ஜோதி, பரஞ்சுடர் என்ற பெயர்களும் உண்டு.
தீபத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
* திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
* திருவண்ணாமலையை பார்த்து 'நமசிவாய' என்று சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
* திருவண்ணாமலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும்போது மலையின் உள்பகுதியில் ஒலி ஒன்றைக் கேட்டதாக ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் கூறியுள்ளனர்.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றிய பிறகு அதை வணங்கி கிரிவலம் வந்தால் அந்த ஜோதியின் கதிர்கள் உடம்பில் பட்டு ஆன்ம பலம் அதிகரிக்கும்.
* தீபத் திருநாளில் 5 முறை கிரி வலம் வர பாபங்களிலிருந்து முழு விமோசனம் கிடைக்கும்.
* தீபம் ஏற்றப்படும்போது, 'தீப மங்கல ஜோதி நமோ நம' என்ற பாடலை பாட, குடும்பத்தில் மங்கலம் உண்டாகும்.
* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிக்க சித்தர்கள் வருகை தருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகை தைலத்தை சேர்த்து விடுவதாக சொல்கிறார்கள். இதனால் இது தீய சக்திகளை அழிக்கும்.
* கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவர்க்கு 1000 அச்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை தீபத்தன்று சிவலிங்கம் முன் நெய் விளக்கேற்ற வாழ்க்கை பிரகாசமாகும்.
* கார்த்திகை தீப காட்சியை பார்ப்பவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியம் கிட்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் சமயம் அங்கு இருந்து தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
00:54
