#👉🏼இன்றைய ராசிபலன்✡️
*_📆 29-09-25 📆_*
*_திங்கட்கிழமை_*
*_🇮🇳 புரட்டாசி - 13 🇮🇳_*
*_🔎ராசி பலன்கள்🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய மாற்றம் ஏற்படும். வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் ஏற்படும். வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். ஆன்மிக பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் . உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். நண்பர்களின் உதவியின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
⭐️பரணி : சிந்தித்து செயல்படவும்.
⭐️கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உருவாகும். உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் அமையும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சஞ்சலமான சிந்தனைகள் மனதளவில் குறையும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.
⭐️கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : சங்கடம் நீங்கும்.
⭐️மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். கல்வியில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️திருவாதிரை : ஆர்வமின்மை ஏற்படும்.
⭐️புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம்
⭐️பூசம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் உருவாகும். கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐️மகம் : மாற்றங்கள் உருவாகும்.
⭐️பூரம் : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். அரசு காரியத்தில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். தாமதம் விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
⭐️சித்திரை : இலக்குகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். முயற்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️சித்திரை : அலைச்சல் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : பொறுமை வேண்டும்.
⭐️விசாகம் : போட்டிகள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது விவேகம் வேண்டும். சக ஊழியர்களால் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️அனுஷம் : கவனம் வேண்டும்.
⭐️கேட்டை : சங்கடங்கள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் தனிப்பட்ட கவனம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். புதிய கல்வி குறித்த தேடல்கள் அதிகரிக்கும். ஆதரவு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மூலம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : கவனம் பிறக்கும்.
⭐️உத்திராடம் : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவுகளின் பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவால் நினைத்தது நிறைவேறும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
⭐️திருவோணம் : வெற்றிகரமான நாள்.
⭐️அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
வரவுகளில் இருந்த தடைகள் விலகும். புதிய விஷயங்களில் பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு பாடங்களில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அரசு வழியில் சாதகமான சூழல் அமையும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடையாக இருந்தவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️அவிட்டம் : தடைகள் விலகும்.
⭐️சதயம் : குழப்பங்கள் மறையும்.
⭐️பூரட்டாதி : புரிதல்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு நீங்கும். சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது தெளிவை ஏற்படுத்தும். வேலையாட்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் புரிதல் இன்மை உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : சச்சரவுகள் நீங்கும்.
⭐️உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
⭐️ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.
*┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈*