சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு (Type 1, Type 2 என்று அழைப்பார்கள்). முதல் வகையினருக்கு 10 வயதிற்கு முன்பே (பொதுவாக பிறப்பிலேயே) சர்க்கரை நோய் இருக்கும். இந்த வகையினருக்கு பெரும்பாலும் மாத்திரை மற்றும் இன்சுலின் ஆகியவற்றாலேயே சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
Type 2 (இரண்டாம் வகை):
இவர்களுக்கு பிறப்பால் இல்லாமல், பின்னர் உணவு பழக்கவழக்கம் காரணமாகவோ அல்லது மன அழுத்தம் முதலிய காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படும். பொதுவாக அன்றாட சர்க்கரை அளவில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதால், இரண்டாம் வகை நீரிழிவு நோயின் பாதிப்பை அளப்பதற்கு HBA1C என்ற அளவுகோலை பயன்படுத்துகின்றனர்.
(மாத்திரைகள் ஏதும் உட்கொள்ளாமல் இயற்கையாக) HBA1C 6.0 அல்லது அதற்கு குறைவாக இருந்தால் சர்க்கரை நோய் இல்லை.
(மாத்திரைகள் ஏதும் உட்கொள்ளாமல் இயற்கையாக) HBA1C 6.0 - 7.0: இது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. பொதுவாக மருத்துவர்கள் இந்த நிலையில் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சியை பரிந்துரைப்பார்கள். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது அவசியம். உணவு மற்றும் உடற்பயிற்சியால் இந்த அளவு மாறாமல் இருந்தால் அவ்வாறே தொடரலாம். பலருக்கு நீரிழிவு நோய் வந்த பிறகு, மருந்துகளை உட்கொள்வதால் HBA1C இந்த அளவில் இருக்கக்கூடும். இவ்வாறானவர்களுக்கு பொதுவாக மருத்துவர்கள் மாத்திரைகளை நிறுத்துமாறு பரிந்துரைக்க மாட்டார்கள். ஆயினும், பல மாதங்களாக இதே அளவில் இருந்தால் மாத்திரையின் வீரியத்தை குறைத்துப் பார்ப்பார்கள். அவ்வாறே தொடர்ந்தால் ஒரு வேளை உணவு, உடற்பயிற்சிகளை மட்டும் பரிந்துரைப்பார்கள்.
HBA1C 7.0க்கு மேல்: இது நீரிழிவு நோயை குறிக்கும். இந்த நிலையில் நிச்சயம் மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள் (அதனுடன் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்). தங்கள் HBA1C அளவிற்கேற்ப மருந்தின் வீரியமும், உட்கொள்ளும் முறைகளும் இருக்கும். இந்த நிலையில் வெறும் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் நோயை குணப்படுத்துவது கடினம். மேலும், HBA1C அளவிற்கேற்ப இந்த நோய் இருதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும். உடனே அச்சம் கொள்ள வேண்டாம். HBA1C 11 வரை இருந்து பின்னர் மருந்துகள், உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் அதை 6.1க்கு கொண்டு வந்துள்ளேன். கடவுள் அருளால், வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை. இந்த நிலை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நலம்.
மருத்துவரின் மருந்துகளின் கூடவே, நான் பரிந்துரைக்கும் சில கை மருத்துவம் (ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்):
1. கருஞ்சீரகத்தை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடி செய்துகொள்ளுங்கள். அதிகாலை வெறும் வயிற்றில் இளஞ்சூட்டில் உள்ள வெந்நீருடன் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை காலத்து பருகலாம்
2. சிறிதளவு வெந்தயத்தை இரவு நீரில் ஊறவைத்து, அதிகாலை வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகி அந்த வெந்தயங்களையும் மென்று தின்னலாம்
3. கொத்தமல்லி இதழ்களை அரைத்து அந்த விழுதை பருகலாம்
4. வெண்டைக்காயை நீளவாட்டில் நறுக்கி இரவு ஒரு கோப்பை தண்ணீரில் ஊறவைக்கவும். அதிகாலை அதிலிருந்து பிசின் போன்ற ஒரு திரவம் வடியும். அதை அந்த கோப்பை நீரில் எடுத்து, அந்த நீரைப் பருகவும்
இவை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என்று கூறுகின்றனர் (நான் தினமும் அதிகாலை கருஞ்சீரக நீரைப் பருகுகிறேன்)
இந்த குறிப்புகள் தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். #💊சர்க்கரை நோய்
