#📝என் இதய உணர்வுகள் #👉வாழ்க்கை பாடங்கள் #💖நீயே என் சந்தோசம்🥰 #📜கவிதையின் காதலர்கள் #💝இதயத்தின் துடிப்பு நீ
மாது - அன்பின் வடிவம்
****************************
கவிதையில் தினம்தோறும்
மலர்ந்து உலாவுகிறாள்
கற்பனைக் களஞ்சியத்தில்
பொங்கி வழிகிறாள்
காலையில் கலக்கம்
கரைந்து போகும்
காலமெல்லாம் நங்கை
அருள் புரிவாளே
கவலை மறைந்து
கனவுகள் உணர்வாகும்
கன்னியின் கரமும்
எப்போதும் காத்திடும்
புதியதொரு விடியலில்
மனமும் ஆர்ப்பரித்தது
புதுமையான முறையில்
பூலோகத்தில் மகிழ்வோம்
எதுகை மோனையோடு
இருவரும் இணைந்தோம்
எழுந்துத் துள்ளியோடுடி
ஏழுசுரங்களில் தவழ்ந்திடுவோம்
மாதவள் பூமியை
அன்னையாய் காப்பவள்
மாங்கனி நகரில்
அதிசயமான புதையல்
சந்தங்கள் பிறந்து
தேனிசை ஒலிக்கும்
சந்தித்து இணைந்த
வரிகளில் பேரானந்தமே
மந்திரமாய் ஈர்த்து
மனங்களில் நிறைந்தாள்
மங்கையின் பேரன்பு
உயிருக்குள் தித்திக்கும்
✍️ஆதி தமிழன்
