எம்.ஜி.ஆர் சம்பளமே வாங்காமல் நடித்த 'நேற்று இன்று நாளை'..!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி மரியாதை உண்டு.
1972-ம் ஆண்டு 'இதயவீணை' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அடுத்த சில தினங்களில் நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர், ஒப்புக்கொண்ட படங்களையும் முடிக்க வேண்டும், அரசியலிலும் தனிகட்சி தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரு வேலைகளிலும் தீவிரம் காட்டத்தொடங்கினார். இதற்கிடையில் நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படமும் தாமதமானது.
படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அசோகனின் நிலைமையை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் எனக் கேட்க, அசோகன் சொன்ன தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். #மக்கள் தலைவர்கள்

01:30