💞யா அல்லாஹ்!
பலாய் முஸீபத்களை விட்டும்!
கடும் தீராத நோய்நொடிகளை
விட்டும்!
அகால மரணத்தை விட்டும்!
உலகின் கேவலத்தை விட்டும்!
எதிரிகளின் சூழ்ச்சிகளை விட்டும்!
பிறரிடம் கையேந்துவதை விட்டும்!
ஈமானுடையத் தன்மையை
இழப்பதை விட்டும்!
இறைவா உனக்கு மாற்றமாக
நடப்பதை விட்டும்!
நரக வேதனையை விட்டும்!
மண்ணறையின் வேதனையை விட்டும்!
வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை வேதனையை விட்டும்!
தஜ்ஜாலின் சோதனையை விட்டும்!
இன்னும் எங்களுக்கு ஏற்படும்
பல இடையூறுகளை விட்டும்!
எம்மையும் எம் குடும்பத்தினரையும்
எம் சமூகத்தையும் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் !
எங்களுக்கு அனைத்து வித
கஷ்டங்களிலிருந்தும்!
வேதனைகளிலிருந்தும்!
விபத்துகளிலிருந்தும்?
விஷஜந்துக்களிடமிருந்தும்!
அபாயங்களிலிருந்தும்!
இயற்கைச்சீரழிவிலிருந்தும்,
எங்களை பாதுகாப்பாயாக !
யா அல்லாஹ் !
ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்!
வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும்!
கடனிலிருந்தும்!
நோயிலிருந்தும்!
எதிர்பாராத மரணத்திலிருந்தும்!
கண் திருஷ்டியில் இருந்தும்!
எதிர்காலத்தின் பயத்திலிருந்தும்
இவை அனைத்தையும் விட்டும்!
எங்களை பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ் !
எங்களது உணவும், உடையும், இருப்பிடம் ரிஜ்க் இவைகளை
ஹலாலானவையாகத் தருவாயாக!
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக
உனக்கு பிரியமானவர்களாக
ஆக்குவாயாக!
யா அல்லாஹ்!
மரணத்தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!
யா ரஹ்மானே!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕌இஸ்லாம்
