மகளைப்போல் பொழியும் மழை
*****************************
துளிகளாக விழும் மழை நீரை
பிஞ்சு விரல் கொண்டு பிடித்து
வீட்டுக்குள் சிறைப் படுத்த
எப்போதும் ஆசை கொள்வாள்.
மேகத்துக்குள் ஊடுருவி
எங்கும் மழையாகப் பொழிந்திட
அவள் எண்ணங்களுக்குள்.
தீராத ரசனையுண்டு.
வியாபித்துப் பெய்யும் மழைகளுக்குள்
இடமாறி விழுந்தேனும்
நீராகப் பொழிவதே
அவளின் இலட்சியமாகும்.
நதிகளுக்குள்ளும் , கடல்களுக்குள்ளும்
அமைதியாக விழுந்தோடுவதே
தனது கனவுயென,
ஆச்சர்யம் கொள்வாள்.
மழையை வீட்டுக்குள்
குடியமர்த்தும் வழி முறைகளை
மேகத்திடம் பேசியவாறு,
சிந்தித்துக் கொண்டேயிருப்பாள்.
ஒரு அடை மழை நாளில்
சிந்திய மழைத் துளிக்குள்
ஊடுருவி
அழகாக மாறியிருந்தாள்.
இனி உங்கள் வீடுகளில்
சிந்தும் மழைத் துளிகளை
கவனமாக உற்று நோக்குங்கள்
அவளே நீராக துள்ளி வருகிறாள். #Trichy Dharma

