#பிரதோஷம் #பிரதோஷம் வளர்பிறை #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
இமயத்தின் வாசன்
முக்கண் திருசடையனே
எங்கும் நிறைந்தவன்
முக்காலமும் அறிந்தவனே
ஆளும் நீலகண்டன்
திருமேனி கண்டேன்
ஆதியில் தோன்றிய
திருவண்ணாமலை ஆண்டவன்
அன்பின் வடிவம்
கருணையின் வள்ளல்
அணுவணுவான பரம்பொருள்
கம்பீரமாய் வீற்றிருப்பவனே
அன்பே சிவமாக
அனைத்தும் நிறைந்திருப்பவன்
அவனின்றி அணுவும்
அவனியில் அசையாது
சாம்பல் மேனியில்
பூசியே ஆடுபவனே
சங்கும் உடுக்கையும்
திருக்கரத்தில் ஏந்தியவனே
உமையாள் தன்னில்
சரிபாதி உடையவனே
உலகநாதா திருச்சடையில்
கங்கையைச் சுமப்பவனே
தமிழை கொடுத்த
தமிழ்த்தாய் தலைவனே
தரணியிலே தமிழ்மொழியில்
தமிழன்னையை தந்தாயே
தமிழால் நித்தம்
வணங்கி மகிழ்கிறேன்
தமிழால் தினமும்
வாழ்க்கையும் வாழ்கிறேன்
தமிழில் உயிரும்
உணர்வும் கொண்டேன்
தமிழைப் படைத்த
ஆதிநாதா போற்றுகிறேன்
✍️ தமிழ் தாசன்
