#🎬 சினிமா #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் #🧐நாட்டு நடப்பு
செப்டம்பர் 23
இயக்குனர் திடீர் மரணம்
பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு நடித்த 'மனதை திருடி விட்டாய்', தவிர 'ஒரு பொண்ணு ஒரு பையன்' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.டி.நாராயணமூர்த்தி (வயது 59), நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு 8.30 மணியளவில் மரணம் அடைந்தார். ஓரிரு படங்களில் நடித்துள்ள அவர், டி.வி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவரது மகன் லோகேஸ்வரன் கனடாவில் இருக்கிறார். அவர் நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ஆர்.டி.நாராயணமூர்த்தியின் இறுதிச்சடங்கு நடக்கிறது. மனைவியின் பெயர் அம்சவேணி.
#RIPNarayanamurthy
