ShareChat
click to see wallet page
ஸ்ரீ (969)🏹🚩DPTVM020508 . அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே!!! (8/11) . . . நம்மாழ்வார் : திருவாய்மொழி : இரண்டாம்பத்து: ஐந்தாந்திருமொழி: . . பாசுரம் : 3060: பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள், தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை, என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை, சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. . பதவுரை: பொன் முடி - பொன் மயமான திருமுடியையுடையவனாய் அம் போர்ஏற்றை - அழகிய போரேறு போன்றவனாய் எம்மானை - எனக்கு நாதனாய் நால் தட தோள் - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய் தன் முடிவு ஒன்றும் இல்லாத - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய் தண் துழாய் மாலையனை - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனாய் என் முடிவு காணாதே - என்னுடைய தாழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என் உள் கலந்தானை - என்னோடு என்னோடு கலந்தருள்புரிந்த எம்பெருமானை நான் சொல் முடிவு காணேன் - நான் முழுமையாக புகழ்ந்து கூறும் வழி அறியாதவனாக இருக்கின்றேன் என் சொல்வது - என்னவென்று சொல்லி புகழ்வது சொல்லீர் - நீங்களே சொல்லுங்கள். . . தெளிவுரை: . பொன் மயமான திருமுடியையுடையவனாய், . அழகிய போரேறு போன்றவனாய், . எனக்கு நாதனாய், . நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய், . தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய், . குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனாய், . என்னுடைய தாழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னோடு கலந்தருள்புரிந்த எம்பெருமானை, . நான் முழுமையாக புகழ்ந்து கூறும் வழி அறியாதவனாக இருக்கின்றேன். . என்னவென்று சொல்லி புகழ்வது ? நீங்களே சொல்லுங்கள். . . எம்பெருமானின் பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி, தன்னுடைய தாழ்ச்சியையும் இயம்பி, . “அழகு, ஆற்றல், பெருமை, பண்பு முதலியவற்றின் எல்லையாகத் திகழும் எம்பெருமான், இப்படிப்பட்ட அடியாரின் தாழ்ச்சியை பாராமல் அருள் புரிந்தது அவனுடைய நீர்மை குணத்தைக் காட்டுகிறது” என்கிறார் நம்மாழ்வார். . இது அவனுடைய பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும். . . . நம்மாழ்வார் திருவடிகளே சரணம். #ராமாநுஜர்
ராமாநுஜர் - பn நம்மாழ்வார் பn நம்மாழ்வார் - ShareChat

More like this